திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பின் பிறந்த முதல் குழந்தை... அம்மா ஆனார் நடிகை தீபிகா படுகோனே

Published : Sep 08, 2024, 01:31 PM ISTUpdated : Sep 08, 2024, 01:35 PM IST

Deepika Padukone Blessed with a baby girl : நடிகை தீபிகா படுகோனே - நடிகர் ரன்வீர் சிங் ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது.

PREV
14
திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பின் பிறந்த முதல் குழந்தை... அம்மா ஆனார் நடிகை தீபிகா படுகோனே
Ranveer Singh - Deepika Padukone

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் தமிழிலும் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து பாலிவுட்டில் பிசியான இவர் அங்கு ஷாருக்கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் ஆனது. நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கரம்பிடித்தார் தீபிகா.

24
Deepika Padukone Ranveer Singh

தீபிகா - ரன்வீர் ஜோடியின் திருமணம் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தீபிகா பிசியாக நடித்து வந்ததால் இந்த ஜோடி கடந்த 6 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு தன் மனைவி தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் ரன்வீர் சிங். இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்தன.

இதையும் படியுங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு; ரஜினியை ஓவர்டேக் செய்த விஜய்! வசூலில் சாதனை மேல் சாதனை படைக்கும் கோட்!

34
Deepika padukone pregnant

பின்னர் சில மாதங்கள் கழித்து தீபிகா - ரன்வீர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாகவும் செய்திகள் உலா வந்தன. அது துளி கூட உண்மையில்லை என அந்த ஜோடி மறுத்தது. இதையடுத்து தீபிகா கர்ப்பமாக இருப்பதாக சொன்னதே பொய் என்று அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனிடையே கர்ப்பமான வயிற்றோடு போட்டோஷூட் நடத்தி அந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் தீபிகா.

44
Deepika Ranveer baby girl

இந்த நிலையில், தீபிகா - ரன்வீர் சிங் ஜோடிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரசவ  வலி ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஹெச்.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை தீபிகா படுகோனேவுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பின் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ள தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... காதலனுடன் சண்டையா? திடீரென திருமணத்தை தள்ளிப்போட்டது ஏன்? நடிகை தமன்னா விளக்கம்

click me!

Recommended Stories