கேரள திரையுலகை உலுக்கி வரும் "ஹேமா கமிட்டி அறிக்கை", தமிழ் திரையுலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். தொடர்ச்சியாக பல நடிகைகள் இதுகுறித்து பேசி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ் திரையுலகில் பாலியல் ரீதியான அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்களை முழுமையாக அகற்ற, முக்கிய பல முடிவுகள் இன்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு மீட்டிங்கில் விவாதிக்கப்பட்டது.
அதில் பல புதிய விதிகள் அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நபர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் நிரூபிக்கப்பட்டால், திரை உலகில் பயணிக்க அவர்களுக்கு ஐந்தாண்டு வரை தடை விதிக்கப்படும் என்றும், யூட்யூப் தலங்களில் சினிமா பிரபலங்கள் பற்றி ஆதாரமே இல்லாமல் வீண் வதந்திகளையும், அவர்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசும் நபர்கள் மீது, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க, குறிப்பிட்ட அந்த பிரபலத்திற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் நடிகர் சங்கம் செய்து தரும் என்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வேட்டையன் முதல் சிங்கிள்.. 27 ஆண்டுகள் கழித்து ரஜினியோடு AI மூலம் இணைந்த பாடகர் - மாஸ் காட்டிய ராக்ஸ்டார்!