விரைவில் தனது அரசியல் பயணத்தை முழுமூச்சாக செயல்படுத்த உள்ள நடிகர் விஜயின் நடிப்பில் இன்னும் ஒரே ஒரு திரைப்படம் தான் வெளியாக உள்ளது என்று நினைக்கும் போது, அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோக அலைகள் எழுந்து வருகிறது. பல பேட்டிகளில் கூட வெங்கட் பிரபு ஒரே ஒரு விஷயத்தை தான் குறிப்பிட்டு பேசினார். அதாவது இந்த திரைப்படம் தளபதி விஜய்க்கு நம்முடைய பிரியாவிடையை ஆத்மார்த்தமாக கொடுக்கும் ஒரு திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல நுணுக்கமான விஷயங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தினோம்.
ஜூன் அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் கோட் திரைப்படம் வெளியாக வேண்டும் என்று தான் தயாரிப்பு தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டதாகவும், ஆனால் பல புதிய தொழில்நுட்பங்கள் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றை சரிவர மேற்கொள்ள தங்களுக்கு மேலும் சில காலம் தேவைப்படும் என்று கூறி, அதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஒப்புக்கொண்டு தான் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரைப்படம் வெளியானது என்று கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.