சிக்கலில் சிக்கிய சங்கரின் படம்.. துணை நின்று ரிலீசுக்கு உதவிய ஜெயலலிதா - எந்த படம் தெரியுமா?

First Published | Sep 30, 2024, 6:16 PM IST

Director Shankar : கோலிவுட் உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரோடு வலம்வருபவர் தான் இயக்குனர் சங்கர். அவர் இயக்கத்தில் பல படங்கள் மெகா ஹிட்டாகியுள்ளது.

Jayalalitha

கும்பகோணத்தில் பிறந்து, இயந்திரவியல் துறையில் தனது பட்டய படிப்பை முடித்த இயக்குனர் தான் சங்கர். சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வருகிறார். தொடக்கத்தில் இருந்தே திரைக்கதை எழுதும் திறன் கொண்டிருந்த சங்கர், சில மேடை நாடகங்களை அரங்கேற்ற தொடங்குகிறார். அப்படி அவர் திரைக்கதை எழுதிய ஒரு நாடகத்தை பார்த்து வியந்து போகிறார் பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். 

என்னதான் திரைக்கதை எழுதி வந்தாலும், சினிமா உலகில் மிகப்பெரிய நடிகனாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட சங்கருக்கு, இயக்குனராகம் வாய்ப்பு கிடைக்கிறது. இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரன் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தாலும், அவருடைய பல திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் அவர் பணியாற்றி வந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

"சிவகார்த்திகேயன் இடம் இனி எனக்கு தான்" கோட் படத்தில் நானும் இருக்கேன் - SKவை வம்பிழுத்த சதீஷ்!

Shankar

குறிப்பாக எஸ் ஏ சந்திரசேகரின் "பவித்ரன்", "வசந்த ராகம்", "நீதிக்கு தண்டனை" மற்றும் "சீதா" உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் பணியாற்றி வந்தார். தொடர்ச்சியாக சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தும், திரைப்படங்களுக்கு துணை இயக்குனராக பணியாற்றியும் வந்த சங்கர், கடந்த 1993ம் ஆண்டு பிரபல நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான "ஜென்டில்மேன்" என்கின்ற திரைப்படத்தை இயக்குகிறார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வெகு சில இயக்குனர்களில் ஒருவராக மாறுகிறார். 

தொடர்ச்சியாக இவருடைய இயக்கத்தில் வெளியான "காதலன்", "இந்தியன்", "ஜீன்ஸ்", "முதல்வன்", "பாய்ஸ்", "அந்நியன்", "சிவாஜி", "எந்திரன்" மற்றும் "நண்பன்" என்று எல்லாமே சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வரை தன்னுடைய இயக்கத்தில் வெளியான எந்த ஒரு திரைப்படமும் பிளாப் ஆகாமல் பார்த்துக் கொண்டவர் சங்கர் என்றால் அது மிகையல்ல.

Tap to resize

Rajinikanth

உண்மையில் பிளாப் என்ற ஒரு விஷயத்தை சங்கர் முதல் முதலில் உணர்ந்த திரைப்படம் இந்தியன் 2 என்றால் அது மிகையல்ல. தன்னுடைய தனித்துவமான இயக்கத்தினால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழோடு வளம் வந்து கொண்டிருக்கிறார் அவர். திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகளைக் கடந்து விட்டது என்றாலும், குறைந்த அளவிலான திரைப்படங்களை தான் அவர் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஒரு திரைப்படத்தில் சங்கருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியை, அப்போது முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா தீர்த்துவைத்த சம்பவம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 1994ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமொன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் "காதலன்".

Kadhalan Movie

இந்த திரைப்படத்திற்கு நான்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மெகா ஹிட் ஆன நிலையில், முக்கால முக்காபுலா பாடல் லிம்கா ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி பல பெருமைகளை கொண்ட "காதலன்" திரைப்படம் அப்போது வெளியாவதே மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. 

காரணம் அப்போது எம்.பி-யாக இருந்த ஒருவர், இந்த திரைப்படம் தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளார். அதாவது கவர்னரை தவறான தோற்றத்தில் இந்த திரைப்படத்தில் காட்டுவதாகவும், ஆகையால் இந்த திரைப்படம் வெளியிடாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும், அல்லது கவர்னர் தோன்றும் அந்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்திருக்கிறார். 

இருப்பினும் இப்படத்தை பார்த்த ஜெயலலிதாவிற்கு அந்த படம் மிகவும் பிடித்துப் போக, பல இடங்களில் பேசி எந்தவித காட்சிகளையும் நீக்காமல் சங்கருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய உதவிகளை செய்து அப்படம் ரிலீஸ் ஆக உதவி இருக்கிறார்.

துபாயை சேர்ந்த தொழிலதிபருடன் அனுஷ்கா ஷெட்டிக்கு டும் டும் டும்! சைலண்டாக நடக்கும் திருமண ஏற்பாடு!

Latest Videos

click me!