
6 அடி உயரம்... அழகிய கண்கள்.. தேவதை போல் அழகு பொம்மாயியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார் நடிகை அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு திரையுலகின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், தனது முதல் படத்திலேயே டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் திறமையான நடிப்பு மூலம் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக மாறினார். அனுஷ்கா ஷெட்டியை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சுந்தர் சி தான். 2006-ஆம் ஆண்டு மாதவனை ஹீரோவாக வைத்து இவர் இயக்கிய 'இரண்டு' படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அனுஷ்காவின் நடிப்பும், அழகும் தமிழ் ரசிகர்களை சுழட்டி போட்டது.
அனுஷ்கா தொடர்ந்து தமிழில், முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்த, வேட்டைக்காரன், சிங்கம் சீரிஸ், வானம், சகுனி, தாண்டவம், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அனுஷ்காவின் சில படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக, அருந்ததி, பஞ்ச முகி, ருத்ரமா தேவி, பாகமதி, பாகுபலி போன்ற படங்கள் அனுஷ்காவை தனித்துவமான நாயகியாக காட்டியது.
வைரமுத்துவை மிஞ்சிய மகன்; Palindrome வார்த்தைகளை பயன்படுத்தி மதன் கார்க்கி எழுதி ஆச்சர்ய பாடல்!
நடிப்பில் திறமையை நிரூபித்த அனுஷ்கா, சில காதல் சர்ச்சியிலும் சிக்கியவர். நாக சைதன்யா, ஆர்யா போன்ற நடிகர்களுடன் சில கிசுகிசு வந்து ஓய்ந்த போதிலும்... பாகுபலி நாயகன் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஜோடி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பல வருடமாக செய்திகள் வெளியாகி வந்தது. குறிப்பாக பாகுபலி படத்தின் ரிலீசுக்கு பின்னர் இவர்கள் இருவரின் ஜோடியை பார்த்து ரசிகர்களும் அனுஷ்கா - பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை பட்டனர். ஆனால் இவர்கள் இருவரும், தாங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே என அந்த தகவலை நிராகரித்தனர்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே அனுஷ்காவின் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில், விரைவில் நடிகை அனுஷ்கா மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக திரையுகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து இதுவரை வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில்... அனுஷ்காவுக்கும்... துபாயை சேர்ந்த தொழிலதிபருக்கு திருமணம் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், கூடிய விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருமண ஏற்பாடுகள் சைலண்டாக நடந்து வருகிறதாம். ஆனால் இப்படி வெளியாகும் தகவலுக்கு அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மையானது என்பதிலும் சந்தேகம் உள்ளது. ஏற்கனவே பல திருமண வதந்திகளில் அனுஷ்கா ஷெட்டி சிக்கியுள்ளது போல், இந்த தகவலும்... வதந்தியாக மாறி விடாமல், அனுஷ்கா திருமணம் ஆகி செட்டில் ஆக வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
ரஜினிக்கு பயந்து 2 இளம் ஹீரோக்களுக்கு நடுவே சிக்கிய சிவகார்த்திகேயன்! தீபாவளி ரிலீஸ் பட அப்டேட்!
42 வயதாகும் நடிகை அனுஷ்கா... தன்னுடைய திருமணத்திற்க்கு பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், 3 வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல், பெற்றோர் ஆசைக்காக பல கோயில்களுக்கு சென்று ஜாதகத்தில் உள்ள தோஷத்திற்காக பல பரிகாரம் செய்த நிலையில், திருமணம் கை கூடி வராததால், கடந்த ஆண்டு தான், "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி" திரைப்படத்தில், நவீன் பாலிஷெட்டியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு அனுஷ்கா ஷெட்டி கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் "காட்டி" படத்தில் நடிக்கிறார். இதை தொடந்து ஜெயசூர்யா, பிரபு தேவாவுடன் இணைந்து, "கத்தனார் - தி வைல்ட் சோர்சரர்" என்ற ]திரில்லரில் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்காவின் திருமண தகவல் ஒருபுறம் தீபாய பரவி வரும் நிலையில், இதுகுறித்து அனுஷ்கா என்ன பதில் அளிப்பார் என்பது? ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.