வைரமுத்துவை மிஞ்சிய மகன்; Palindrome வார்த்தைகளை பயன்படுத்தி மதன் கார்க்கி எழுதி ஆச்சர்ய பாடல்!

First Published | Sep 30, 2024, 3:15 PM IST

பாலின்ரோம் என்கிற வார்த்தைகளை கேள்வி பட்டிருக்கீங்களா? இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி... ஒரு படத்தின் சூழலுக்கு ஏற்ப, மதன் கார்கி பாடல் எழுதி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அந்த பாடல் குறித்து பார்க்கலாம். 
 

Palindrome Song

பாலின்ரோம் (Palindrome) என்கிற வார்த்தை தமிழில், மிகவும் சிறப்பான வார்த்தைகளாக பார்க்கப்படுகின்றன. அதாவது தாத்தா, விகடகவி, பாப்பா, போன்ற வார்த்தைகளை அப்படியே திருப்பி போட்டு படித்தாலும் அதே வார்த்தை தான் வரும். இதைதான் பாலின்ரோம் என கூறுகிறோம். இந்த மாதிரி இரண்டு மூன்று வார்த்தைகளை தேடி, பிடித்து சொல்வதே மிகவும் கடினம். ஆனால் இது சொல்லவே பலரும் திக்கு முக்காடுவது உண்டு ஆனால் பிரபல பாடலாசிரியர் மதன் கார்கி இந்த பாலின்ரோம் வார்த்தைகளை முழுக்க முழுக்க பயன்படுத்தி தமிழில் ஒரு பாட்டையே எழுதி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

Madhan Karky

மேக ராகமே
மேள தாளமே
தாரா! ராதா!
கால பாலகா
வாத மாதவா
ராமா! மாரா!
மாறுமா கைரேகை மாறுமா?
மாயமா நீ நீ நீ மாயமா?
தோணாதோ…?
கான கனகா…

என துவங்கும் இந்த பாடல் 2016 ஆம் ஆண்டு வெளியான, 'வினோதன்' படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிக்பாஸ் பிரபலமான வருண் நடித்திருந்தார். ஹீரோயினாக வேதிகா நடித்திருந்தார். படத்தின் கதைப்படி, ஹீரோ Obsessive compulsive disorder என்கிற ஒரு விதமான, மன சுழற்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பார். அதாவது இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஒரு பாதி எப்படி இருக்கிறதோ, மற்றொரு பாதியும் அதேபோல் எக்ஸாக்டாக இருக்க வேண்டும் என நினைப்பவர். இதனால் அவருக்கு தோன்றும் காதல் பாடல் கூட, பாலின்ரோம் வார்த்தைகளால், அதாவது பாடலின் வார்த்தையின் முதல் பாதி மற்றும் இரண்டாவது பாதி ஒரே மாதிரி இருப்பது போல் மதன் கார்கி எழுதி இருந்தார். 

ரஜினிக்கு பயந்து 2 இளம் ஹீரோக்களுக்கு நடுவே சிக்கிய சிவகார்த்திகேயன்! தீபாவளி ரிலீஸ் பட அப்டேட்!

Tap to resize

Vinodhan movie

70-க்கும் மேற்பட்ட பாலின்ரோம் வார்த்தைகளை பயன்படுத்தி எழுதப்பட்ட முதல் தமிழ் பாடல் இது தான். இந்த பாடலுக்கு பின், அப்பா வைரமுத்துவையே மதன் கார்க்கி ஒரு மிஞ்சி விட்டார் என ரசிகர்கள் புகழ்ந்தனர். விநோதன் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்த நிலையில்... இந்த பாடலை, ஹரி சரண் மற்றும் சாஷா ஆகியோர் பாடி இருந்தனர். ஒரு காதல் மெலடி பாடலாக வெளியான இந்த பாடல் படம் பெரிதாக வெற்றி பெறாததால் அதிகம் கவனிக்கப்படாத பாடலாக மாறியது.
 

Variamuthu:

ஆனால் இதுபோன்ற வித்தியாசமான பல பாடல்கள்... பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றாலும், மறக்க முடியாத பாடல்களில் ஒன்றாகவே உள்ளது. மதன் கார்க்கியை பொறுத்தவரை, இதுபோன்ற வித்தியாசமான முயற்சியோடு பல பாடல்களை எழுதி ஹிட் கொடுத்துள்ளார். வைரமுத்து கவித்துவமாக பாடல் எழுதுவதில் வல்லவர் என்றால்... மதன் கார்கி பாடல் எழுதுவதும் வினோதமான முயற்சியை மேற்கொள்பவர் இதை பல பாடல்களில் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகையை துரத்தி.. துரத்தி காதலித்த ஆக்ஷன் அர்ஜுன்! தோல்வியில் முடிந்த சோகம்!

Latest Videos

click me!