புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதம்; தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண் - தவெக கூட்டத்தில் சலசலப்பு

Published : Sep 30, 2024, 02:21 PM IST

கும்பகோணத்தில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற தவெக கட்சி கூட்டத்தில் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

PREV
14
புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதம்; தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண் - தவெக கூட்டத்தில் சலசலப்பு
TVK Party Meeting

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27ந் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டிற்கு வருவோருக்கான அறிவுரைகளை வழங்கவும், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கும்பகோணம் சென்றிருந்தார்.

24
Tamilaga Vettri kazhagam

அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் தவெக கட்சி மீட்டிங் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனிடையே புஸ்ஸி ஆனந்த் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட பெண் ஒருவர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். புஷ்பா என்கிற பெண் தான் புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இவர் தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்த தங்கதுரை என்பவரின் சகோதரி ஆவார்.

இதையும் படியுங்கள்... ரஜினிக்கு பயந்து 2 இளம் ஹீரோக்களுக்கு நடுவே சிக்கிய சிவகார்த்திகேயன்! தீபாவளி ரிலீஸ் பட அப்டேட்!

34
Vijay, Bussy anand

ரசிகர் மன்றத்தில் பல ஆண்டுகளாக தன்னுடைய சகோதரர் நிர்வாகியாக இருந்தும் அவருக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பதவி வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பிய அந்த பெண், தவெக கட்சி போர்டே தங்கள் நிலத்தில் தான் உள்ளது அப்படி இருந்தும் தன் சகோதரனுக்கு கட்சியில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி இன்றைய கூட்டத்திலும் அவரை ஓரங்கட்டி இருப்பதாக சுட்டிக்காட்டி கடும் ஆவேசத்துடன் பேசினார்.

44
Kumbakonam TVK Party Meeting

இதையடுத்து அங்கிருந்த பவுன்சர்கள் சிலர் அந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று அங்கிருந்த கண்ணாடி அறையில் அடைத்தனர். இந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் புஸ்ஸி ஆனந்தும் தன்னுடைய பேச்சை முடிக்காமலேயே பாதியிலேயே அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் அங்கு புஸ்ஸி ஆனந்த் கையால் நலத்திட்ட உதவிகள் வாங்க வந்தவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல் வட சென்னையில் நடைபெற்ற தவெக கட்சி கூட்டத்தில் பதில் தொடர்பான விவாதத்தின் போது சலசலப்பு ஏற்பட்டது. விஜய் கட்சி தொடங்கி முதல் மாநாடு நடத்தும் முன்னரே கட்சியில் பதவிக்கு போட்டி நிலவி வருவதால தமிழக வெற்றிக் கழகம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இதையும் படியுங்கள்... அக்டோபரில் சினிமா ரசிகர்களுக்கு செம வேட்டை தான்; ஒரே மாதத்தில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸாகிறதா?

Read more Photos on
click me!

Recommended Stories