
தீபாவளி என்கிற வார்த்தையை கேட்டதும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாபகங்கள் நினைவுக்கு வரும். குழந்தைகள் என்றால் அவர்கள் எதிர்பார்ப்பது, பட்டாசு, புத்தாடை, மற்றும் பலகாரங்களை தான். குடும்ப தலைவிகளை பொறுத்தவரை, தீபாவளிக்கு கோவிலுக்கு சென்று நோம்பு எடுப்பது, பிள்ளைகள் மற்றும் கணவன் குடும்ப உறவினர் வீட்டுக்கு சென்று வருவது போன்ற இனிமையான தருணங்களுக்காக கார்த்திப்பார்கள், சினிமா ரசிகர்களே அன்றைய தினம் வெளியாகும் திரைப்படங்களுக்காக காத்திருப்பது வழக்கம்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் 'விடாமுயற்சி' வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இன்னும் ஷூட்டிங் பணிகள் நிறைவடையாத காரணத்தால்... தீபாவளியில் இருந்து பொங்கலுக்கு தாவி விட்டது இந்த படம். அதே போல், ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் என்பதால்... பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் மூன்று முக்கிய நடிகர்களின் படங்கள் தான் தீபாவளியை குறிவைத்து களமிறங்க உள்ளது. அவை எந்தெந்த படங்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அமரன்:
இந்த ஆண்டு தீபாவளியை குறிவைத்து களமிறங்க உள்ள முக்கியமான திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், இந்திய ராணுவ வீரர்... மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இவர் நடித்த படங்களை விட, சிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றி... ராணுவ வீரருக்கான பிரதேயக பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நடிகை சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திரம் குறித்த இன்ட்ரோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள உள்ள இந்த படம் அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
பிரபல நடிகையை துரத்தி.. துரத்தி காதலித்த ஆக்ஷன் அர்ஜுன்! தோல்வியில் முடிந்த சோகம்!
பிரதர்:
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் களமிறங்கவுள்ள மற்றொரு திரைப்படம், ஜெயம் ரவியின் 'பிரதர்'. இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்துடன் கூடிய ரொமான்டிக் படமாக எடுக்கப்பட்டுள்ளது. சிவ மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், போன்ற ஹிட் படங்களின் வரிசையில் பிரதர் படமும் இணையுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.
கடந்த சில வாரமாக, மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ள ஜெயம் ரவி... மும்பையில் செட்டில் ஆக முயன்று வருவதாக சில தகவல்கள் பரவி வருகிறது. இந்த விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர், ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படம் வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிளெடி பெக்கர்:
சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி இருவருமே திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் டஃப் கொடுக்கும் விதமாக, இளம் நடிகர் கவின் நடித்துள்ள பிளெடி பெக்கர் திரைப்படம் அக்டோபர் 31-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் கவின் ஒரு பிச்சைகாரர் போல் நடித்துள்ளார். டாடா, ஸ்டார் என இரண்டு ஹிட் படங்களில் நடித்துவிட்டு... சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் கவின் மோத உள்ளதால் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த படத்தை, டாக்டர், ஜெயிலர், ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தன்னுடைய முதல் படமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் ஓப்பனிங்; ஆனால் 'லியோ' பட சாதனையை முறியடிக்க தவறிய... 'தேவாரா' படத்தின் முதல் நாள் வசூல்!