
தமிழ் சினிமாவில், அதிரடி நாயகனாகவும், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக அறியப்படும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், 1962 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள மாது கிரி என்கிற இடத்தில் பிறந்தவர். 62 வயதிலும் ஃபிட்னஸில் இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் அர்ஜுனின் உண்மையான பெயர் சீனிவாச சர்ஜா. திரையுலகில் அறிமுகமான பின்னர், தன்னுடைய பெயரை அர்ஜுன் சர்ஜா என மாற்றிக் கொண்டார்.
1981 ஆம் ஆண்டு, கன்னடத்தில் வெளியான சும்ஹாடா மரி சனியா, என்கிற படத்தில் தன்னுடைய 19 வயதில் ஹீரோவாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஆஷா பிரேமா, யுத்தா பூஜா, போன்ற பல கன்னட படங்களில் ஹீரோவாக நடித்த அர்ஜுன் சர்ஜா, தமிழில் 'நன்றி' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ராமநாராயணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், கார்த்திக், நளினி, மகாலட்சுமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கடமை, இளமை, வேஷம், யார் அவன், எங்கள் குரல், என பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், என மூன்று மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள அர்ஜுன் சர்ஜா சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகை நளினி உடன் இணைந்து, யார், நன்றி, எங்கள் குரல், என மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்து நளினி உடன் நடித்த போது, நளினியின் அழகும், தன்மையான குணமும், வெள்ளந்தியான பேச்சும் அர்ஜுனுக்கு நளினி மீது காதல் வர காரணமாக அமைந்தது.
தன்னுடைய காதலை சொல்ல, அர்ஜுன் தயாராகி கொண்டிருந்த நேரத்தில் தான்... நளினி பிரபல இயக்குனரும், நடிகருமான ராமராஜனை காதலித்த விஷயம் அர்ஜுனுக்கு தெரிய வந்துள்ளது. மனதளவில் நொறுங்கிப் போன அர்ஜூன், தன்னுடைய காதலை கடைசிவரை நளினியிடம் கூறாமல் மனதிலேயே புதைத்து கொண்டாராம். இந்த தகவல் நளினிக்கு திருமணமான சமயத்தில் அதிகம் பேசப்பட்ட ஒன்று. நன்றி படத்தில் நடிக்கும் போதே... நளினியுடன் அர்ஜுனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டாலும், அது காதலாக மாறியது யார் படத்தில் நடித்த போது தான் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நளினியுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் அர்ஜுன் நடித்திருப்பார்.
ஸ்ரீதேவி மிகவும் திமிர் பிடித்தவர்! மூத்த நடிகையின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
நடிகை நளினி, சென்னையை சேர்த்தவர் தான். இவருடைய தந்தை ஒரு டான்ஸ் மாஸ்டர். அம்மா ஒரு டான்சர் என்பதால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது. அந்த வகையில், 'ஒத்தையடி பாதையிலே' என்கிற திரைப்படத்தின் மூலம் 1980 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய 14 வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ராணுவ வீரன், ஓம் சக்தி, உயிர் உள்ளவரை உஷா, சரணாலயம், மனைவி சொல்லே மந்திரம், போன்ற பல படங்களில் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நளினி நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இவர் நடித்து வந்த சமயத்தில், 1986 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 11 படங்களில் ஹீரோயினாக நடித்த பெருமை இவருக்கு உண்டு. ராமராஜனை காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட நளினி, 1988 ஆம் ஆண்டுடன் திரை உலகில் இருந்து முழுமையாக விலகினார். பின்னர் 2000-ஆம் ஆண்டு கணவர் ராமராஜனிடம் இருந்து விவாகரத்து பெற்ற நளினி, 2002 ஆம் ஆண்டு சிம்பு நடித்த 'காதல் அழிவதில்லை' திரைப்படத்தில் சார்மியின் அம்மா கதாபாத்திரத்தில் ,மிரட்டல் ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நடிகர் அர்ஜுன், நளினியை காதலித்து அது ஒருதலை காதலாக மாறினாலும், பின்னர் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிவேதிதா ரத்த சப்தமி, அக்னி பரவா, உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மேலும் ஸ்ரீ ராமா ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம், தன்னுடைய கணவர் அர்ஜுன் சர்ஜாவுடன் இணைந்து 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் சர்ஜா 62 வயதிலும் பார்க்க ஹீரோ போல் இருந்தாலும், சமீப காலமாக இவருக்கு ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காத நிலையில்... வில்லனாக நடித்து வருகிறார். குறிப்பாக 'லியோ' படத்தில் இவருடைய நடிப்பு அதிகம் பேசப்பட்டது. அதை போல் வெயிட்டான குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் இவர் தீபாவளிக்கு வெளியாக உள்ள அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் இந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், அர்ஜுன் கூடிய விரைவில் தான் நடித்து இயக்கி வெளியான 'ஏழுமலை' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய மருமகன் உமாவதியை ஹீரோவாக வைத்து இரண்டாவது பாகத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அர்ஜுன் சர்ஜாவும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். கூடிய விரைவில் இந்த படம் குறித்த தகவல் வெளியாகலாம் என கூறப்படுவதால் ரசிகர்களும் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.