தமிழ் சினிமாவில் அதிகப்படியான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் என்றால் அது வாலி தான். இவர் தன்னுடைய 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பாடல்களை எழுதி இருக்கிறார். இத்தனை பாடல்களை எழுதி இருந்தாலும் அவர் தான் எழுதியதாக பெருமை கொண்டது ஒரே ஒரு தமிழ் பாடல் தான். அந்த பாடலின் சிறப்பு பற்றியும், அப்பாடல் வரிகளை புகழ்பெற்ற கோவிலின் கல்வெட்டில் செதுக்கப்பட்டது பற்றியும் பார்க்கலாம்.
24
Vaali Song secret
1992-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் மன்னன். இப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என தன் தாயின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரஜினி பாடும் பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. இந்த பாடலுக்கு இளையராஜாவின் இசை ஒரு பிளஸ் என்றால் மற்றொரு பிளஸ் யேசுதாஸின் தெய்வீகக் குரல். இந்த பாடல் தான் வாலியின் பேவரைட் பாடலாம்.
இந்தப் பாடலின் வரிகளை தான் திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவில் கல்வெட்டில் செதுக்கி வைத்திருக்கிறார். அந்த பாடல் வரிகளை செதுக்கியது மட்டுமின்றி அந்த கல்வெட்டின் அருகிலேயே ஒரு ஸ்விட்ச் ஒன்றும் இடம்பெற்று இருக்குமாம். அந்த ஸ்விட்சை ஆன் செய்தால், அந்தப் பாடலும் ஒலிக்குமாம். அதுமட்டுமின்றி அந்த பாடலை ஒலிக்கவிட்டு கண்ணை மூடி தியானம் செய்தால், மெய்மறந்து பழைய நினைவுகளுக்கே எடுத்துச் செல்லுமாம்.
44
Amma Endralaikatha song from mannan
அதுமட்டுமின்றி தங்கள் தாயின் பழைய நினைவுகளையும் அது கண்முன் கொண்டுவருமாம். இந்த பாடலுக்காக கவிஞர் வாலி பெருமைகொள்ள மற்றொரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால், இந்த பாடல் வரிகள் பதிக்கப்பட்ட அதே கோவிலில் ராஜாஜி எழுதிய ‘குறை ஒன்றும் இல்லை கண்ணா’ என்கிற பாடல் வரியும் பதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பாடலை தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத பாடலாக கருதினாராம் கவிஞர் வாலி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.