தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக நீளமான பெயரை கொண்ட படம் எது தெரியுமா?

First Published | Sep 30, 2024, 9:06 AM IST

தமிழ் சினிமாவில் தற்போது பெரிய தலைப்புகளை வைப்பது டிரெண்டிங் ஆக உள்ளது. ஆனால் இதுவரை வெளிவந்த படங்களில் பெரிய தலைப்புடன் கூடிய படம் எது என்பதை பார்க்கலாம்.

Longest movie name

ஒரு படத்துக்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அப்படத்தின் தலைப்பும் முக்கியம். ஏனெனில் பார்ப்பவர்களுக்கு முதலில் ஈர்க்கக்கூடிய விஷயம் அப்படத்தின் தலைப்பாகவே இருக்கும். முந்தைய காலகட்டத்தில் பெரும்பாலும் படத்தின் கதைக்கருவை மையமாக வைத்தே படத்தின் தலைப்புகள் வைக்கப்படும். 

ஆனால் தற்போது ஈர்க்கக் கூடிய வகையில் இருந்தாலோ அல்லத்து டிரெண்டிங்கில் இருந்தாலோ போதும் அதை படத்தின் தலைப்பாக வைத்து விடுகின்றனர். படத்துக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பை வைப்பது தான் தற்போது ஃபேஸன் ஆகிவிட்டது.

Mansoor ali khan

எண்களைக் படத்தின் தலைப்பாக வைப்பதை பார்த்திருக்கிறோம். அதேபோல் ஒரே எழுத்தில் படத்தின் தலைப்பு வைக்கப்படும் சம்பவங்கள் அவ்வபோது அரங்கேறி வருகின்றன. சிலர் தமிழில் தலைப்பு சிக்கவில்லை என்றால் ஆங்கிலத்தில் தலைப்பை வைத்து விடுகின்றனர். 

இப்படி படத்தின் தலைப்பு என்பது ஒரு படத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது. அந்த தலைப்பை தேர்வு செய்ய தனி குழுவே அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் பழக்கமும் கோலிவுட்டில் இருக்கிறது.

இதையும் படியுங்கள்... ஆள விடு சாமி; 16 மணிநேரம் பாடாய் படுத்திய டி.ராஜேந்தர்.. தப்பி ஓடிய எஸ்.பி.பி! எந்த பாட்டுக்கு தெரியுமா?


Mansoor Ali khan Movie

இப்படி இருக்கையில் தமிழ் சினிமா வரலாற்றிலேயே நீளமான பெயரைக் கொண்ட படம் எது என்பதை பார்க்கலாம். அந்த தலைப்பு வெறும் 10, 20 எழுத்துக்களைக் கொண்டது அல்ல, மொத்தம் 52 எழுத்துக்களை கொண்ட நீண்ட தலைப்புடன் ஒரு தமிழ் படம் வெளியாகி இருக்கிறது. 

அந்தப்படத்தில் மன்சூர் அலிகான் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக நந்தினியும் நடித்திருந்தனர். கடந்த 1993-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் நெப்போலியன், நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

Rajadhi Raja Raja Kulothunga Raja Marthanda Raja Gambeera Kathavaraya Krishna Kamarajan

அந்த படத்தின் பெயர், ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’. இப்படத்தை பாலு ஆனந்த் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு மன்சூர் அலிகானே இசையமைத்தும் இருந்தார். 

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக தங்கர் பச்சான் பணியாற்றி இருந்தார். கடந்த 1993-ம் ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆன இப்படம் பெரியளவில் வெற்றியை பெறாவிட்டாலும் அதன் தலைப்புக்காக அப்படத்தை அந்த சமயத்தில் பலரும் வியந்து பார்த்தனர்.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியை விட டாப் குக் டூப் குக் டைட்டில் வின்னருக்கு கிடைத்த காஸ்ட்லி கிஃப்ட் - என்ன தெரியுமா?

Latest Videos

click me!