இயக்குனர் எச். வினோத் என்றாலே இனி நம் ஞாபகத்தில் வரப்போவது, தளபதி விஜயை திரை உலகில் இறுதியாக இயக்கிய இயக்குனர் என்ற பெருமைக்கு உரித்தானவர் என்பது தான். கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற "சதுரங்க வேட்டை" என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமானார். சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டு தமிழக போலீசார் நடத்திய "ஆபரேஷன் பவாரியா" என்ற உண்மை கதையை தழுவி, "தீரன் அதிகாரம் ஒன்று" என்ற திரைப்படத்தை இயக்கினார்.
கார்த்தி மிக நேர்த்தியான போலீஸ் அதிகாரியாக இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். விரைவில் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.