Sivaji Ganesan
உலக நாயகன் கமல்ஹாசன் சிறு வயது முதலிலேயே நடிப்பின் பல்கலைக்கழகமாக பார்க்கப்படும் சிவாஜி கணேசனுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கடந்த 1962ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "பார்த்தால் பசி தீரும்" என்ற திரைப்படம் தொடங்கி, 1992ம் ஆண்டு வெளியான "தேவர் மகன்" திரைப்படம் வரை பல வெற்றி திரைப்படங்களில் உலகநாயகன் கமல்ஹாசன், சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்திருக்கிறார். பல மேடைகளில் தன்னுடைய திரையுலக வாரிசு கமலஹாசன் என்று பெருமையோடு பேசியவர் சிவாஜி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை சூட்டிங் சென்ற கமலஹாசன் தன்னுடைய மூத்த மகள் சுருதிஹாசனை சிவாஜி கணேசன் வீட்டில் விட்டுவிட்டு சென்று இருக்கிறார். அப்போது சிவாஜி கணேசனோடு பேசி பழகிக் கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் செய்த குறும்புத்தனமான விஷயம் ஒன்று செய்ததை அண்மையில் நினைவு கூர்ந்து இருந்தார் கமலஹாசன். "நான் ஷூட்டிங் முடிந்து திரும்பிய போது, ஸ்ருதிஹாசன் கோபமாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். என்னவென்று சிவாஜி கணேசனிடம் கேட்டேன்".
"கொறஞ்சது 1.5 வருஷமாகும்" பிரம்மாண்ட ஹிஸ்டாரிக் படம்.. ரெடியாகும் மாரி செல்வராஜ் - ஹீரோ யார் தெரியுமா?
Actor Sivaji
"சுருதிஹாசனை அழைத்து மிகச் சிறந்த நடிகன் நானா.. உங்க அப்பனா? என்று கேட்டதற்கு, அமைதியாக இருந்த சுருதிஹாசனிடம்.. நானே சொல்கிறேன் கேள், உன் அப்பனை விட நான் தான் சிறந்த நடிகன் என்று சிவாஜிகணேசன் கூற, கோபத்துடன் பேசிய ஸ்ருதிஹாசன், என்னுடைய அப்பா அந்த மரத்தின் மேல் கடகடவென ஏறிவிடுவார்.. எங்க நீங்க ஏறுங்க பார்க்கலாம் என்று கோபமாக கூறியிருக்கிறார். இதை கேட்ட சிவாஜிகணேசன், என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன்.. இது போன்ற குரங்கு வேலைகள் எல்லாம் உன் தகப்பன் தான் செய்வான் என்று வேடிக்கையாக அவரிடம் பதில் அளித்தாராம்".
Sivaji ganesan
சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக தமிழ் திரை உலகில் மிகச் சிறந்த நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமலஹாசன் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். உண்மையில் உலக அளவில் புகழ்பெற்ற தமிழ் நடிகர்களில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் வரிசையில் மிகப்பெரிய புகழோடு வளம் வந்து கொண்டிருப்பவர் கமல் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு விஷயம். இருப்பினும் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் இலங்கை நாட்டில் சிவாஜி கணேசன் நிகழ்த்திய சாதனையை முறியடித்து தன்னுடைய படத்தின் மூலம் வெற்றி கொண்டிருக்கிறார் உலக நாயகன் கமல்.
Actor kamal
பொதுவாக இந்தியாவைத் தாண்டி இலங்கையில் அதிக அளவில் சிவாஜிகணேசன் படங்கள் தான் பெரிய அளவில் வெற்றி பெறும் படங்களாக மாறுமாம். ஆனால் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான "குரு" என்ற திரைப்படம், இலங்கையில் மூன்று திரையரங்குகளில் வெளியானதாம். சுமார் 1000 நாள்களை கடந்து அந்த திரைப்படம் இலங்கையில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறி இருக்கிறது. அதுவரை இலங்கையில் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கமல்ஹாசனின் "குரு" திரைப்படம் புதிய சாதனைகளை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. "ஜுக்னு" என்ற தலைப்பில் தர்மேந்திரா நடித்த திரைப்படத்தை தான் தமிழில் "குரு" என்ற பெயரில் உலகநாயகன் கமல்ஹாசன் ரீமேக் செய்தார்.
அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்த கமல் - அதுவும் இத்தனை கோடியா?