உண்மையில் பல முன்னணி இயக்குனர்கள் இந்த திரைப்படத்தின் கதையை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மூத்த இயக்குனர் பாரதிராஜா, மாரி செல்வராஜ் எதிர்காலத்தில் மிகச்சிறந்த இயக்குனராக வரப்போகிறார் என்று அப்போதே கணித்திருந்தார். இந்த சூழலில் சுமார் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "கர்ணன்". பரியேறும் பெருமாள் படத்தை விட 5 மடங்கு மாபெரும் வெற்றி பெற்று மாரி செல்வராஜுக்கு மெகா ஹிட் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கர்ணன்.
இந்த சூழலில் தான் உதயநிதி ஸ்டாலினோடு மாரி செல்வராஜ் இணைந்தார். அதுவரை தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவை யாருமே பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து மிகப்பெரிய பாராட்டுகளுக்கு உரித்தானவரானார் மாரி செல்வராஜ். அதன் பிறகு அண்மையில் வெளியான அவருடைய "வாழை" திரைப்படம் இப்போது வரை மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.