அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்த கமல் - அதுவும் இத்தனை கோடியா?

First Published | Sep 29, 2024, 1:58 PM IST

Sivakarthikeyan salary : கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி உள்ள அமரன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

Sai pallavi, Sivakarthikeyan

மாவீரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு பணியாற்றி உள்ளனர்.

Amaran Movie

அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் கெளதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கினார். அதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இவர் இயக்கி இருந்தார். அப்போது கமல்ஹாசன் உடன் ஏற்பட்ட பழக்கத்தால் தான் அவருக்கு தனது தயாரிப்பிலேயே படம் இயக்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார் கமல்ஹாசன். அமரன் திரைப்படம் வருகிற அக்டோபர் 31ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... அப்போ ரூட்டு தல; இப்போ கெத்து! அஜித் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யாரென்று தெரிகிறதா?


Amaran Movie Sivakarthikeyan

அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரனாக நடித்துள்ளார். இப்படம் போரில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான் உடற்கட்டுக்கு மாறினார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அதற்கான புரமோஷன் பணிகளும் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

Sivakarthikeyan and Sai Pallavi Salary

இந்த நிலையில், அமரன் படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்காக ரூ.30 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி இப்படத்திற்காக ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இவர்கள் இருவருமே இதுவரை இந்த அளவு சம்பளத்தை வேறு எந்த படத்துக்கும் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் 100 கோடி தான்; ஆனா ஓடிடியில் அதுக்கும்மேல வசூலித்த மகாராஜா!

Latest Videos

click me!