தியேட்டரில் 100 கோடி தான்; ஆனா ஓடிடியில் அதுக்கும்மேல வசூலித்த மகாராஜா!

First Published | Sep 29, 2024, 10:48 AM IST

Maharaja Movie OTT profit : நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த அவரின் 50வது படமான மகாராஜா திரைப்படம் ஓடிடியில் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது.

Maharaja Movie

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, பின்னர் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Vijay Sethupathi

விஜய் சேதுபதி இதுவரை ஐம்பது படங்களில் நடித்திருக்கிறார். அவரின் 50வது படம் மகாராஜா. இப்படத்தை நித்திலன் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் அனுராக் கஷ்யப், நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. விமர்சகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மகாராஜா திரைப்படம் வசூலையும் வாரிக்குவித்தது.

இதையும் படியுங்கள்... மெய்யழகன் vs தேவரா vs லப்பர் பந்து! தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்?

Latest Videos


Maharaja Movie OTT release

நடிகர் விஜய் சேதுபதியின் கெரியரில் அவர் ஹீரோவாக நடித்து ரூ.100 கோடி வசூல் அள்ளிய முதல் படம் மகாராஜா தான். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக ரூ.110 கோடி வசூலித்தது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் மகாராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அதில் வெளியான பின்னர் இப்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக வெளிநாடுகளில் இப்படத்தை ரசிகர்கள் வியந்து பார்த்து தங்கள் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர்.

Maharaja Movie OTT Profit

இதனால் தியேட்டரில் மட்டுமின்றி ஓடிடியிலும் மகாராஜா திரைப்படம் மாஸான சாதனையை படைத்திருக்கிறது. அதன்படி மகாராஜா திரைப்படத்தை ஓடிடியில் சுமார் 2 கோடி பேர் பார்த்துள்ளார்களாம். இதன்மூலம் சுமார் 150 கோடி லாபம் சம்பாதித்து இருக்கிறதாம் நெட்பிளிக்ஸ். அந்நிறுவனம் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை வெறும் ரூ.17 கோடிக்கு வாங்கி இருந்தது. அதைவிட 10 மடங்கு அதிகம் லாபம் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஐஃபா விருதுகள் 2024 : அலேக்காக 6 விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன் - முழு வின்னர்ஸ் லிஸ்ட் இதோ

click me!