மெய்யழகன் vs தேவரா vs லப்பர் பந்து! தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்?

First Published | Sep 29, 2024, 9:52 AM IST

Tamilnadu Box Office Winner : மெய்யழகன், லப்பர் பந்து, தேவரா ஆகிய திரைப்படங்களின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Tamilnadu Box Office

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ந் தேதி திரைக்கு வந்த படம் லப்பர் பந்து. இப்படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன், ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடித்துள்ள தேவரா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த பிரம்மாண்ட படங்களின் ரிலீசுக்கு மத்தியிலும் லப்பர் பந்து திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது.

Devara

இதில் தேவரா திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை கொரட்டலா சிவா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது. இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.172 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. முதல் நாளோடு ஒப்பிடுகையில் இரண்டாம் நாள் இப்படத்தின் வசூல் சரிவை சந்தித்து உள்ளது. இரண்டாம் நாளில் ரூ.80 கோடி மட்டுமே தேவரா வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... லப்பர் பந்து.. படத்தை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர் - கூடவே அவர் கொடுத்த "அடுத்த பட அறிவிப்பு"!

Latest Videos


Meiyazhagan

அதேவேளையில் கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் முதல் நாளில் ரூ.11 கோடி வசூலித்து இருந்தது. இப்படத்தை பிரேம் குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து இருந்தார். இப்படம் இரண்டாம் நாளில் சற்று சரிவை சந்தித்து உள்ளது. நேற்று மட்டும் இப்படம் ரூ.6 கோடி வசூலித்து இருந்தது.

Lubber Pandhu

இந்த நிலையில், தேவரா, லப்பர் பந்து, மெய்யழகன் ஆகிய படங்களின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம். அதன்படி மெய்யழகன் திரைப்படம் சனிக்கிழமை மட்டும் தமிழ்நாட்டில் ரூ.3.75 கோடி வசூலித்து உள்ளது. அடுத்தபடியாக லப்பர் பந்து திரைப்படம் 2.15 கோடி வசூலுடன் இரண்டாம் இடம் பிடித்து உள்ளது. இந்த லிஸ்ட்டில் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படத்துக்கு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.1.85 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இறுதியாக நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் 70 லட்சம் வசூல் உடன் நான்காம் இடம்பிடித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... ஐஃபா விருதுகள் 2024 : அலேக்காக 6 விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன் - முழு வின்னர்ஸ் லிஸ்ட் இதோ

click me!