ஒரே வார்த்தையை 238 முறை பயன்படுத்தி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த சூப்பர் ஹிட் சாங் பற்றி தெரியுமா?

Published : Sep 29, 2024, 07:41 AM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல் ஒன்றில் ஒரே வார்த்தையை 238 முறை பயன்படுத்தி உள்ளனர்; அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

PREV
14
ஒரே வார்த்தையை 238 முறை பயன்படுத்தி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த சூப்பர் ஹிட் சாங் பற்றி தெரியுமா?
AR Rahman

இயக்குனர் பாலச்சந்தரால் ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டவர் ஏ.ஆர்.ரகுமான். மணிரத்னம் இயக்கிய இப்படம் தமிழ் சினிமாவில் இன்று வரை பேசக்கூடிய அளவுக்கு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்ததற்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் பாடல்களும் முக்கிய காரணம். 

ரோஜா படத்துக்கு முன்னர் வரை இளையராஜா உடன் மட்டுமே பணியாற்றி வந்த மணிரத்னம், அப்படத்திற்கு பின் ஏ.ஆர்.ரகுமானுடன் மட்டுமே பணியாற்றி வருகிறார்.

24
AR Rahman Song Secret

மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி என்றாலே மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. ரோஜாவில் தொடங்கிய இவர்களது பயணம் தற்போது தக் லைஃப் வரை தொடர்கிறது. 

பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர்கள், கடந்த 2013-ம் ஆண்டு கடல் என்கிற படத்துக்காக இணைந்து பணியாற்றி இருந்தனர். கடல் திரைப்படத்தின் மூலம் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கும், நடிகை ராதாவின் மகள் துளசியும் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகினர்.

இதையும் படியுங்கள்... டிபன் சாப்பிட சென்ற மனோ.. அந்த கேப்பில் ஒரு மெகா ஹிட் பாடலை எழுதிய வாலி - எந்த பாட்டு தெரியுமா?

34
Kadal Movie

கடல் திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது அப்படத்தின் இசை தான். நெஞ்சுக்குள்ள, மூங்கில் தோட்டம், மகுடி, அடியே என விதவிதமான ஹிட் பாடல்களை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். 

ஆனால் அப்படம் பெரியளவில் வெற்றியடையவில்லை. இருப்பினும் அப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் பெரியளவில் கொண்டாடப்பட்டது. அதில் மகுடி பாடலில் ஒளிந்திருக்கும் ஒரு சுவாரஸ்ய தகவல் பற்றி பார்க்கலாம்.

44
Magudi Song

கடல் படத்தில் இடம்பெறும் மகுடி பாடலை பிக்பாஸ் பிரபலம் ஏடிகே பாடி இருந்தார். அதுமட்டுமின்றி இப்பாடல் வரிகளையும் அவரே எழுதி இருந்தார். இந்த பாடலில் மகுடி என்கிற வார்த்தை மட்டும் அதிகளவில் இடம்பெற்று இருக்கும். 

அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 238 முறை மகுடி என்கிற வார்த்தையை பாடல் முழுவதும் பயன்படுத்தி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இப்பாடல் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்று கேட்டாலும் அதன் வைப்பே தனி தான்.

இதையும் படியுங்கள்... லப்பர் பந்து.. படத்தை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர் - கூடவே அவர் கொடுத்த "அடுத்த பட அறிவிப்பு"!

Read more Photos on
click me!

Recommended Stories