அப்போ ரூட்டு தல; இப்போ கெத்து! அஜித் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யாரென்று தெரிகிறதா?

First Published | Sep 29, 2024, 11:57 AM IST

நடிகர் அஜித்குமார் மடியில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Attakathi Dinesh with Ajithkumar

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தினேஷ். அப்படத்தில் ரூட்டு தலயாக நடித்திருந்த அவர், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி இருந்தார். அட்டக்கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார் தினேஷ். அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்த இரண்டாவது படம் குக்கூ.

Attakathi Dinesh cukkoo movie

குக்கூ திரைப்படத்தை ராஜு முருகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் கண்பார்வையற்ற இளைஞராக நடித்திருந்தார் தினேஷ். பார்வையற்ற ஜோடியில் காதல் கதையாக இந்த குக்கூ திரைப்படம் உருவாகி இருந்தது. இப்படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. பின்னர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தில் நடித்தார் தினேஷ். இப்படத்தின் விசாரணைக் கைதிகளுக்கு நடக்கும் கொடுமைகளை கண்முன் காட்டி இருந்தனர். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் 100 கோடி தான்; ஆனா ஓடிடியில் அதுக்கும்மேல வசூலித்த மகாராஜா!


Attakathi Dinesh

பின்னர் ஒரு நாள் கூத்து, கபாலி, அண்ணனுக்கு ஜே, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்த தினேஷ், அண்மையில், லப்பர் பந்து என்கிற திரைப்படத்தில் கெத்து தினேஷாக நடித்து மாஸ் காட்டி இருந்தார். லப்பர் பந்து கிரிக்கெட்டில் அதிரடி மன்னனாக நடித்து அசத்தி இருந்தார் தினேஷ். அதுமட்டுமின்றி விஜயகாந்த் ரசிகனாக படத்தில் அவர் நடித்திருந்தது அவரது கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

Attakathi Dinesh Childhood Photo

இப்படி தமிழ் சினிமாவில் ஒரு Underrated ஹீரோவாக வலம் வரும் தினேஷ், நடிகர் அஜித்குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித்தின் மடியில் அமர்ந்திருக்கிறார் தினேஷ். இதைப்பார்த்த ரசிகர்கள் கெத்து தினேஷா இது என வாயடைத்துப் போய் உள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருவதோடு, விரைவில் அவர் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் ஆவலோடு கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மெய்யழகன் vs தேவரா vs லப்பர் பந்து! தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்?

Latest Videos

click me!