Meiyazhagan Box Office
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் 96. தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்தவர் இயக்குனர் பிரேம் குமார். அவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி உள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி கூறி இருக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Meiyazhagan movie
மெய்யழகன் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி தமிழில் மெய்யழகன் என்கிற பெயரிலும், தெலுங்கில் சத்யம் சுந்தரம் என்கிற பெயரிலும் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு முதல் நாளே விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரமாக இருப்பதால் சற்று லேக் ஆவதாக கூறப்பட்டது.
இதையும் படியுங்கள்... அக்டோபரில் சினிமா ரசிகர்களுக்கு செம வேட்டை தான்; ஒரே மாதத்தில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸாகிறதா?
Meiyazhagan movie Collection
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட படக்குழு இன்று முதல் மெய்யழகன் படத்தின் காட்சிகளை ட்ரிம் செய்துள்ளது. சுமார் 18 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து கத்திரி போட்டு தூக்கிவிட்டார்களாம். அதை தூக்கிய பின்னர் படம் தொய்வின்றி நகர்வதாக கூறப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் மெய்யழகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
Meiyazhagan movie Box Office collection
இப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் 2.8 கோடியும், இரண்டாம் நாளில் 3.75 கோடியும், மூன்றாம் நாளில் 4.15 கோடியும் வசூலித்து மூன்று நாட்களில் 10.7 கோடி வசூலித்து இருந்தது. இதுதவிர கேரளாவில் ரூ.40 லட்சமும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.2 கோடியும் வசூலித்த இப்படம் இந்தியாவின் இதர பகுதிகளில் ரூ.1 கோடி வசூலை அள்ளியது. இதுதவிர வெளிநாடுகளில் சக்கைப்போடு போட்டு வரும் இப்படம் அங்கு ரூ.6.75 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் உலகளவில் மெய்யழகன் படம் 3 நாட்களில் ரூ.20.85 கோடி வசூலித்து இருக்கிறது.
Meiyazhagan Beats Lal Salaam Box Office
இதன்மூலம் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை மெய்யழகன் படம் முறியடித்து உள்ளது. அதன்படி லால் சலாம் படம் மொத்தமாகவே ரூ.20 கோடி மட்டுமே வசூலித்து இருந்த நிலையில், மெய்யழகன் திரைப்படம் மூன்றே நாட்களில் அந்த வசூலை ஓவர்டேக் செய்துள்ளது. அடுத்தடுத்து விடுமுறை வருவதால் மெய்யழகன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிரபல நடிகையை துரத்தி.. துரத்தி காதலித்த ஆக்ஷன் அர்ஜுன்! தோல்வியில் முடிந்த சோகம்!