இப்படிப்பட்ட சூழலில் தான் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு உருவாகி வந்தது தளபதியின் 68வது திரைப்படம். குறிப்பாக அந்த திரைப்படத்திற்கு "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்று பெயரிடப்பட்டது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி உலக அளவில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் வெங்கட் பிரபு தனக்கே உரித்தான அந்த கமர்சியல் ஸ்டைலில் மசாலா கலந்த ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்திருந்தார்.
அது மட்டும் அல்லாமல் இந்த திரைப்படத்தில் பல கேமியோ கதாபாத்திரங்களும், சுவாரசியமான சம்பவங்களும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக படம் துவங்கும் முதல் காட்சியிலேயே மறைந்த அரசியல் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் காட்சிகள் AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டது திரையரங்கை அதிர வைத்தது என்றால் அது மிகையல்ல. அதுமட்டும் அல்லாமல் மட்ட என்கின்ற பாடலில் பிரபல நடிகை திரிஷா ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடனமாடியிருந்தார்.