தளபதிக்கு ‘ஹாட்ரிக் ஹிட்’ நெக்ஸ்ட் ஷாருக்கான் படம்னு வேகமா உயர்ந்தாலும்..நிறைவேறாமல் உள்ள அட்லீயின் ‘அந்த’ ஆசை

Published : Sep 21, 2022, 02:22 PM ISTUpdated : Sep 21, 2022, 02:24 PM IST

Atlee : இயக்குனர் அட்லீ இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

PREV
15
தளபதிக்கு ‘ஹாட்ரிக் ஹிட்’ நெக்ஸ்ட் ஷாருக்கான் படம்னு வேகமா உயர்ந்தாலும்..நிறைவேறாமல் உள்ள அட்லீயின் ‘அந்த’ ஆசை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. கடந்த 1986-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி மதுரையில் பிறந்த இவரின் உண்மையான பெயர் அருண்குமார். சத்யபாமா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படித்த இவர், முதன்முதலில் என்மேல் விழுந்த மழைத்துளி என்கிற குறும்படத்தை இயக்கினார். அதன்பின்னர் சிவகார்த்திகேயனை வைத்து முகப்புத்தகம் என்கிற குறும்படத்தை இயக்கினார்.

இந்த குறும்படம் மிகவும் பிரபலமானதை அடுத்து இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்த அட்லீ, அவர் இயக்கிய எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். நண்பன் படத்தின் கிளைமேக்ஸில் ஒரு பையனுக்கு அட்லீ என்றே பெயர் வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இயக்குனர் ஷங்கரின் செல்லப்பிள்ளையாக இருந்தார் அட்லீ.

25

பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு அட்லீக்கு மிகுந்த பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தது. ராஜா ராணி படத்தை பார்த்து இம்பிரஸ் ஆன நடிகர் விஜய், தனது தெறி படத்தை இயக்க அட்லீக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இதையும் படியுங்கள்...  அரியவகை நோய் பாதிப்பால் அமெரிக்க பயணமா?... தீயாய் பரவும் தகவல் - பதறிபோய் சமந்தா தரப்பு கொடுத்த விளக்கம்

விஜய்யின் தீவிர ரசிகனான அட்லீ, அப்படத்தின் பூஜையின் போதே இப்படத்தை நான் ஒரு இயக்குனரா எடுக்கப்போறதில்ல.. ஒரு ரசிகனா எடுக்க போறேன் அப்டினு சொல்லி இருந்தார். சொன்னபடியே படத்தை செதுக்கி இருந்தார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு விஜய்யை படத்தில் செம்ம மாஸாக காட்டி வெற்றி வாகை சூடினார் அட்லீ.

35

அட்லீயுடன் தெறி படத்தில் பணியாற்றிய அனுபவம் பிடித்துப்போனதால் மீண்டும் தனது மெர்சல் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் விஜய். இப்படத்தின் விஜய்யை மூன்று வித்தியாசமான லுக்கில் காட்டி ரசிகர்களை மெர்சலாக்கினார் அட்லீ. இப்படத்தின் வசனங்களும் பெரிய அளவில் பேசப்பட்டு, படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... வசூலில் பட்டையை கிளப்பிய 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம்ம குஷியான ரசிகர்கள்!

இதன்பின்னர் பிகில் படத்துக்காக விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்தது. விஜய்யை மைக்கேல் - ராயப்பன் என இரண்டு வேடங்களில் நடிக்க வைத்திருந்தார் அட்லீ. அதிலும் குறிப்பாக விஜய்யின் ராயப்பன் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தை வேற லெவலில் வெறித்தனமாக காட்சிப்படுத்தி இருந்தார் அட்லீ. இப்படம் விஜய் - அட்லீ கூட்டணிக்கு ஹாட்ரிக் ஹிட் படமாக அமைந்தது.

45

விஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஷாருக்கான் படம். தற்போது ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இப்படம் மூலம் இந்தியில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

55

தமிழில் நான்கே படங்களை இயக்கிய அட்லீ தற்போது பாலிவுட் வரை சென்றுவிட்டார். அவரின் அசுர வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான். ஷாருக்கான் போன்ற மிகப்பெரிய நடிகரின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தாலும், இயக்குனர் அட்லீயின் நிறைவேறாத ஆசை ஒன்று இருக்கிறதாம். அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பணியாற்ற வேண்டும் என்பதுதானாம். இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அட்லீ. சூப்பர்ஸ்டார் படத்தை இயக்க வேண்டும் என்கிற அவரது ஆசை விரைவில் நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.

இதையும் படியுங்கள்... லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா... ரிலீசுக்கு முன்பே 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நயன்தாரா படம்

Read more Photos on
click me!

Recommended Stories