இப்படி, படு பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான, 'திருச்சிற்றமபலம்' திரைப்படம் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு வசூல் சாதனை படைத்தது 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த நிலையில், தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகயுள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சன் நெஸ்ட் ஓடிடி தளத்தில், செப்டம்பர் 23ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். மேலும் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோரும் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ஆகியோர் நடித்திருந்தனர். மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: 2 கிட்னியும் செயலிழந்துவிட்டது! ICU-வில் பிரபல காமெடி நடிகர்! சிகிச்சைக்கு உதவுங்கள் கதறிய நடிகர் பெஞ்சமின்!