தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த ஆண்டு நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின் சினிமாவில் படு பிசியாகிவிட்டார். தற்போது அவர் கைவசம் யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர பாலிவுட்டில் 2 படம், கோலிவுட்டில் 2 படம் என நார்த் முதல் சவுத் வரை கைவசம் அரை டஜன் படங்களுடன் வலம் வருகிறார் சமந்தா.