நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தியிலும் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்ததால் தற்போது பான் இந்தியா நடிகையாகிவிட்டார் நயன். இவர் கைவசம் இந்தியில் ஜவான், தமிழில் கனெக்ட், தெலுங்கில் காட்ஃபாதர், மலையாளத்தில் கோல்டு ஆகிய படங்கள் உள்ளன.
தமிழில் ஜெயம், தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும் என ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய மோகன் ராஜா தான் காட்ஃபாதர் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அவர் நடித்துள்ள முதல் தெலுங்கு படம் இதுவாகும்.
இவ்வாறு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால், காட்ஃபாதர் படத்துக்கு தெலுங்கில் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இதன் எதிரொலியாக இப்படத்தின் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டும் ரூ.57 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. இதுதவிர சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமை ரூ.60 கோடிக்கும், திரையரங்க உரிமை ரூ.90 கோடிக்கும் விற்கப்பட்டு உள்ளதாம். இதன்மூலம் இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.207 கோடி வசூலித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... 2 கிட்னியும் செயலிழந்துவிட்டது! ICU-வில் பிரபல காமெடி நடிகர்! சிகிச்சைக்கு உதவுங்கள் கதறிய நடிகர் பெஞ்சமின்!