டிடியின் சகோதரியும், 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகையுமான பிரியா தர்ஷினி தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் தன்னுடைய அக்காவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அழகிலும், நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் டிடி வளர்ந்து நின்றார். தன்னை பார்த்து வளர்ந்த தங்கையின் வளர்ச்சியை ஒவ்வொரு முறையும் நினைத்து நெகிழ்வதில் பிரியதர்ஷினிக்கும் அப்படி எல்லை இல்லா ஆனந்தம்.
47
திருமணத்திற்கு பின்னர், இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் அம்மாவான பிரியதர்ஷினி சில காலம் குழந்தைகளை வளர்ப்பதற்காக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருந்து ஒதுங்கியே இருந்த நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன் மீண்டும் கம் பேக் கொடுத்தார்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ப வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வந்த இவர், பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் மட்டுமே தற்போது நடித்து வருகிறார்.
67
இந்த சீரியலில் ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில், மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் பிரியதர்ஷினி.
டிடி தற்போது ஜிடி ஹாலிடேஸ் என்கிற நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதால், அக்கா பிரியதர்ஷினி நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக வைத்துளளார். அந்த வகையில் பிரியதர்ஷினி தற்போது மாலத்தீவுக்கு சென்று அங்கு ஸ்லீவ் லெஸ் உடையில் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.