நடிகை மாளவிகா மோகனன், பாத் ரூமில் அதுவும் பாத் டப்பில் ஆண் நண்பர் ஒருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள், இவர் தான் உங்கள் காதலரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய நண்பர் என ஒருவரின் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.
46
என்னதான் நண்பராக இருந்தாலும், பாத் ரூமில், பாத் டப்பில்... அவர் மீது சாய்ந்தபடி, கொஞ்சம் ரொமான்டிக்காக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இருப்பதால் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், உங்களின் காதலரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தை வெளியிட்டு, மாளவிகா மோகனன் போட்டுள்ள பதிவில்.... நட்பு என்பது கனவுகளால் உருவாக்கப்படும் நபர்களை போல். எப்பொழுதும் உங்கள் நம்பிக்கையை பெற்றிருப்பார்கள். உங்கள் மோசமான நாட்களில் உங்களில் பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள், ஒரு நிமிடம் உங்கள் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தால் கூட அதை படிக்கக் கூடிய திறமை சாலிகள். நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உடனே உங்களுக்கு கை கொடுக்க ஓடி வருவார்கள், அப்படி ஒரு நபர் தான் இவர்’ என்று கூறி இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
66
மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மாளவிகா தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும், 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரம் வரை மேக்கப் போட்டு நடிப்பதாக இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.