Bigg Boss Tamil season 8
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், தீபக், ரயான், பவித்ரா, ஜாக்குலின், செளந்தர்யா ஆகிய 8 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களில் ரயான், டிக்கெட் டூ பினாலே டாஸ்க் வென்றதால் அவர் நேரடியாக பைனலுக்குள் நுழைந்துவிட்டார். எஞ்சியுள்ள 7 போட்டியாளர்களும் இந்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகி உள்ளனர். இதனிடையே பிக் பாஸ் ஒரு செம ட்விஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.
Bigg Boss Tamil season 8 contestants
அதன்படி பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி சென்ற போட்டியாளர்களில் 8 பேர் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ரீ-எண்ட்ரி கொடுப்பவர்கள் வைல்டு கார்டு போட்டியாளராக கருதப்படுவார்கள் என்றும் அவர்களால் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களில் இருவர் ஸ்வாப் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் தற்போது உள்ள டாப் 8 போட்டியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அந்த போட்டியாளர்கள் யார் யார் என்கிற விவரமும் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் இவ்ளோ கல்நெஞ்சக்காரரா? கெஞ்சு கேட்டும் நிறைவேறாமல் போன மஞ்சரியின் ஆசை!
Wild Card Entry in Bigg Boss
அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் 8 வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் தான் மீண்டும் வீட்டுக்குள் செல்ல உள்ளன. அந்த வகையில் ரவீந்தர் சந்திரசேகர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், ஷிவக்குமார், சாச்சனா ஆகிய 8 பேர் தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளனர். இவர்களின் வரவால் ஆட்டத்தில் செம ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இவர்கள் யாரை எலிமினேட் செய்யப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி உள்ளது.
Arnav Re entry in Bigg Boss
பிக் பாஸில் உள்ள டாப் 8 போட்டியாளர்கள் தற்போது உள்ளே வர உள்ள வைல்டு கார்டு போட்டியாளர்களில் இருந்து அர்னவ்வை வச்சு செய்ய முடிவெடுத்துள்ளனர். ஏனெனில் அர்னவ் இந்த வீட்டில் இருந்த வரை நல்லவர் போல நடித்துவிட்டு, நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது மேடையில் வைத்து சக போட்டியாளர்களை ஜால்ராஸ் என்றெல்லாம் தரக்குறைவாக பேசி இருந்தார். இதனால் அவர்தான் தங்களின் முதல் டார்கெட் என டாப் 8 போட்டியாளர்கள் கூறி இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்... PR டீம் சிறப்பா வேலை செய்றாங்க! சௌந்தர்யாவை அழ வைத்த போட்டியாளர்கள்!