நயன்தாராவிடம் 5 கோடி கேட்கவே இல்லை... சந்திரமுகி படக்குழு விளக்கம்!

Published : Jan 06, 2025, 10:33 PM IST

Nayanthara Documentary Case: நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்திதற்காக ரூ.5 கோடி இழப்பீடு கேட்கவில்லை என படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். நயன்தாராவுக்கு தாங்களே அனுமதி அளித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

PREV
16
நயன்தாராவிடம் 5 கோடி கேட்கவே இல்லை... சந்திரமுகி படக்குழு விளக்கம்!
Nayanthara Documentary Case

நயன்தாராவின் ஆவணப்படம், Nayanthara: Beyond the Fairytale, நவம்பர் 2024 இல் Netflix இல் வெளியானது. அதில், நானும் ரவுடிதான் படத்தில் இருந்து 3 விநாடி காட்சியை பயன்படுத்தியதால், தனுஷ் - நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு சர்ச்சையும் இதே விஷயத்தில் உருவாகியுள்ளது.

26
Chandramukhi Producers

யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்த நடிகர் சித்ரா லட்சுமணன், நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி படத்தின் சில காட்சிகள் படத் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறாமல் சேர்க்கப்பட்டதில் அதிருப்தி அடைந்ததாகத் தெரிவித்தார். இதிலிருந்துதான் புதிய சர்ச்சை கிளப்பியுள்ளது.

 

36
Nayanthara: Beyond the fairy tale

2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் வரும் காட்சியை நயன்தாரா தனது ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளார். அதற்காக சந்திரமுகி படக்குழு நயன்தாராவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

46
Nayanthara and Rajinikanth

ஆனால், சந்திரமுகி தயாரிப்பாளர்கள் நயன்தாரா மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று கூறியுள்ளனர். 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டதாக வெளியான செய்தியையும் நிராகரித்துள்ளனர். ஆவணப்படத்தில் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

56
Nayanthara in Chandramukhi

முன்னதாக, நானும் ரவுடிதான் படத்தின் சில கிளிப்களைப் பயன்படுத்தியதற்காக நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கு எதிராக நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். மூன்று வினாடி வீடியோவை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

66
Nayanthara vs Dhanush

இந்த வழக்கு நவம்பர் 27, 2024 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது ஆஜரான நயன்தாராவின் வழக்கறிஞர், தாங்கள் காப்பிரைட் சட்டத்தை மீறவில்லை என்று கூறினார். ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகள் தங்கள் தனிப்பட்ட சேமிப்பில் இருந்தவை என்றும் தனுஷின் நிறுவனத்திற்குச் சொந்தமானவை அல்ல என்றும் கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories