Pradeep Love Story: அந்த ஒரு வார்த்தையால் என் காதல் முறிந்தது; கலங்க வைக்கும் பிரதீப் ரங்கநாதனின் லவ் ஸ்டோரி!

Published : Mar 03, 2025, 03:21 PM IST

'டிராகன்' (Dragan Movie) படத்தின் மூலம் 100 கோடி வசூலை, தட்டி தூக்கியுள்ள நிலையில்,  பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) முதல் முறையாக தன்னுடைய காதல் கதையை வெளிப்படுத்தியுள்ளார். 

PREV
15
Pradeep Love Story: அந்த ஒரு வார்த்தையால் என் காதல் முறிந்தது; கலங்க வைக்கும் பிரதீப் ரங்கநாதனின் லவ் ஸ்டோரி!

இன்ஜினீரின் படித்து விட்டு, சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்த துவங்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவருடைய சீனியர் தான், இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய  'டிராகன் 'திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

25
டிராகன் புரமோஷன் நிகழ்ச்சியில் காதல் பற்றி கூறிய பிரதீப் ரங்கநாதன்

இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான், தன்னுடைய மனதிற்குள் பூட்டி வைத்திருந்த, அந்த லவ் ஸ்டோரியை பிரதீப் ரங்கநாதன் முதல் முறையாக வெளிப்படுத்தி உள்ளார்.

இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக பிரதீப் ரங்கநாதன் படைத்த அல்டிமேட் சாதனை

35
லேன்ட் லைன் போனில் காதல் வளர்த்த பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் ஸ்கூல் படிக்கும் போது தான், இந்த காதல் கதை அரங்கேறி உள்ளது. பிரதீப் 12-ஆம் வகுப்பு படிக்கும் போது, இவருடைய காதலியிடம் போன் இருந்தாலும்,  இவருடைய வீட்டில் Land line போன் தான் இருந்ததாம். எனவே பிரதீப் தான் எப்போதும் காதலிக்கு போன் செய்து பேசுவாராம். அப்படி ஒருமுறை பேசும் போது, காதலியின் லைன் பிஸியாகவே இருந்துள்ளது. அரைமணிநேரம் சென்று மீண்டும் போன் பண்ணியபோதும் லைன் பிசியாக இருந்துள்ளது. பின்னரே பிரதீப்பின் போனை எடுத்து, பேச... நான் போன் பண்ணிய போது யாரிடம் பேசினாய் என கேட்டுள்ளார் பிரதீப்.

45
ஸ்கூல் படிக்கும் போதே காதலித்த பிரதீப் ரங்கநாதன்

இவருடைய காதலி பக்கத்துக்கு வீட்டு சிவாவிடம் பேசியதாக கூறியுள்ளார். மற்றொரு நாள் இதே போல் பிரதீப் 4 முறைக்கு மேல் போன் செய்தபோதும் போன் பிசியாக இருந்துள்ளது. பின்னர் போனை எடுத்து பேசும்போது, சிவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னை பாட சொன்னான் அதான் நான் பாடினேன் என காதலி கூற, பிரதீப் உனக்கு பாட்டு பாட தெரியுமா? இதை ஏன் என்னிடம் சொல்லவே இல்லை என கேட்க... நீ எனக்கு பாட தெரியுமா? என இதுவரை கேட்டதே இல்லையே என காதலி பேச இப்படியே வாக்குவாதம் முற்றியுள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை இதுதானாம்!
 

55
ஒரே வார்த்தியில் புட்டுக்கொண்ட பிரதீப் ரங்கநாதன் லவ்

பின்னர், ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பிரதீப் நான் தான் உன் பாய் ஃபிரெண்ட்  உனக்கு நான் முக்கியமா? இல்லை அவன் முக்கியமா என கேட்க... இவரின் காதலியோ எனக்கு நீயும் வேண்டும் அவன் என் ஃப்ரெண்ட் அவனும் வேண்டும் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து உனக்கு என்னைக்கு நான் தான் முக்கியம் என தோன்றுகிறதோ அன்னைக்கு எனக்கு நீயே போன் பண்ணு என ஒற்றை வார்த்தியில் எண்டு கார்டு போட, பிரதீப்பும் காதலியின் போன் காலுக்காக ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருஷம் வெயிட் பண்ணியும் கூட போன் மட்டும் வரவே இல்லையாம். 

 

Read more Photos on
click me!

Recommended Stories