Published : Mar 03, 2025, 02:33 PM ISTUpdated : Mar 03, 2025, 07:34 PM IST
Anna Serial Today Episode: ஜீ தமிழ் 'அண்ணா' சீரியலில், வெங்கடேஷ் தான் ரத்னா - அறிவழகன் விஷயத்தில் சம்மந்தப்பட்டிருப்பது என தெரியவர, ஷண்முகம் அவனை சூறையாட நினைக்கும் நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' சீரியலில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பரணி போன் மூலம் வெங்கடேஷை எங்கேயும் வெளியே விடாதீர்கள் என கூறியதை தொடர்ந்து, சண்முகத்தின் தங்கைகள் வெங்கடேஷை சுற்றி வளைக்கிறார்கள். இதன் மூலம் வெங்கடேஷுக்கு நாம் சிக்கி விட்டோம் என தெரியவர அவன் தப்பிக்க முயற்சிக்கிறான்.
24
இசக்கியிடம் இருந்து தப்பிக்க ரத்னா கழுத்தில் கத்தி வைத்த வெங்கடேஷ்
இந்நிலையில், தப்பி செல்ல முயலும் வெங்கடேஷை கத்தியுடன் மடக்கி பிடிக்க... வெங்கடேஷ் லாவகமாக இசக்கியிடம் இருந்து கத்தியை பிடிங்கி ரத்னாவின் கழுத்தில் கத்தியை வைக்கிறான். பின்னர் ரத்தனாவையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்கிறான்.
34
இசக்கியிடம் இருந்து தப்பிக்க ரத்னா கழுத்தில் கத்தி வைத்த வெங்கடேஷ்
மற்றொருபுறம் பரணி, சண்முகத்திடம் நீ போய் உன் ரத்னாவை கூட்டிட்டு வா.. நான் ஸ்கூலுக்கு போய் உண்மையை நிரூபிப்பதற்காக எல்லா ஏற்பாட்டையும் செய்து வைக்கிறேன் என சொல்கிறாள்.
44
ரத்னாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்யும் வெங்கடேஷ்
சண்முகம் வெங்கடேஷ் மற்றும் ரத்னாவை தேடி கொண்டிருக்க. மறுபக்கம் பரணி, அறிவழகன் என எல்லோரும் ஸ்கூலில் அவர்களின் வருகையை எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ரத்னாவை கத்தி முனையில் கடத்தி சென்ற வெங்கடேஷ் அவளை ஒரு அரண்மனையில் அடைத்து வைக்கிறான். ரத்னாவிடம் தவறாக நடந்து கொள்ளவும் முயற்சிக்கும் நிலையில், இன்று என்ன நடக்க போகிறது? சண்முகம் ரத்னாவை காப்பாற்றினானா இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.