ஜீ தொலைக்காகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளநிலையில், பரமேஸ்வரி பாட்டி ரேவதியின் திருமணத்தை நிறுத்த இன்று என்ன செய்ய போகிறார் என்பதை பார்ப்போம்.
TRP-யில் தொடர்ந்து முன்னணி இடத்தை வகித்து வரும் கார்த்திகை தீபம் தொடரில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரேவதியின் திருமணத்திற்கு வந்ததால், சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரி பாட்டியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
24
திருமணம் பற்றி கார்த்தி சொன்ன வார்த்தை
ரேவதியை பாட்டியை, ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் கார்த்திக்குக்கு ஏதாவது செய்து திருமணம் செய்து வைத்துவிடவேண்டும் என என்னும் நிலையில், கார்த்தி அவர்கள் மூவரிடமும் எனக்கு ரேவதியை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை. ஆனால் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி அவங்க வாழ்க்கையை காப்பாத்தணும்னு நினைக்கிறன் என சொல்லிவிட்டு, அந்த அறையில் இருந்து வெளியேறுகிறான்.
இதை கேட்டு அலுத்துக்கொள்ளும் பாட்டி, இனிமே நாம அவனோட கல்யாண விஷயம் பத்தி எது பேசுனாலும், கார்த்திக் இருக்கும்போது மட்டும் பேசவேண்டாம் என கூறுகிறார். திருமணத்தை எப்படி நிறுத்துவது என ராஜராஜன் அப்படிவதும் கேட்ட, பரமேஸ்வரி பாட்டி, பொண்ணு மாப்பிள்ளைக்கு புது துணி கொடுக்கணும், அதுக்கு அந்த மகேஷ் வர கூடாது என திட்டம் போட, சாமுண்டீஸ்வரியோ இன்னொரு பிளானில் உள்ளார்.
44
சாமுண்டீஸ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன
பின்னர் ஐயர், ரேவதியை கூப்பிட்டு புடவை கொடுக்க அவளும் சந்தோசமாக வாங்கிக்கொண்டு புடவையை மாற்ற செல்ல மணமகள் அறைக்கு செல்கிறார். மறுபக்கம் அருண் மகேஷிடம் வந்து மாயா கூப்பிட்டதாக சொல்லி அழைத்து சென்று அவன் எதிர்பார்க்காத சமயத்தில் ரூமுக்குள் அடைக்கிறான். இதனால் மகேஷ் மேடைக்கு வராத காரணத்தால் பாட்டி என் பேரனை கூப்பிடவா என்று சாமுண்டீஸ்வரியிடம் கேள்வி எழுப்புகிறாள்.
ஆனால் சாமுண்டீஸ்வரி மனதில் நினைத்திருப்பதும் கார்த்தி தான் என தெரியாமல் பரமேஸ்வரி பாட்டி பேச, இப்படியான நிலையில் அடுத்து நடக்க போகிறது, என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.