Published : Feb 28, 2025, 01:29 PM ISTUpdated : Feb 28, 2025, 07:50 PM IST
Zee Tamil Anna Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா தங்கைகள் பாச பிணைப்பாக ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' சீரியலின் இன்று வெங்கடேஷ் கொத்தாக சிக்கியநிலையில், என்ன நடக்க போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
Anna Serial Update: ''அண்ணா' சீரியல் நேற்றைய எபிசோடில் பரணிக்கு வெங்கடேஷ் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவரை பின்தொடர்ந்து செல்கிறார். இந்நிலையில் இன்று அண்ணா சீரியலில் நடைபெற உள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.
25
முருகனிடம் வேண்டிக்கொண்ட சண்முகம்
ரத்னா விஷயத்தில் மனம் நொந்து போன சண்முகம், கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். முருகா நான் எப்படியாவது என் தங்கச்சி மேல இருக்குற களங்கத்தை போக்கணும்.. யார் இப்படி அவளை அசிங்கப்படுத்துனாங்க அப்படினு எனக்கு தெரியணும் என, உருகி உருகி வேண்டிக்கொள்ள... மற்றொருபுறம் பரணி வெங்கடேஷ் மீது சந்தேகம் வந்து அவனை பின் தொடர்கிறார்.
முகமூடி அணிந்து கொண்டு, முகத்தை மூடியபடி சரக்கு வாங்கிய வெங்கடேஷ் அந்த டீ கடையில் வேலை செய்த வடமாநில இளைஞரை சந்திக்கிறான். இதன் மூலம் இது வெங்கடேஷ் செய்த சதி வேலை என்பதை புரிந்து கொண்ட பரணி இதுபற்றி உடனடியாக, சண்முகம் மற்றும் முத்துபாண்டியிடம் கூறி வெங்கடேஷை பிடித்தே ஆகவேண்டும் என சொல்கிறாள்.
45
இசைக்கியிடம் பரணி சொன்ன விஷயம்
பரணிக்கு உண்மை தெரிந்த விஷயம் எதுவும், வெங்கடேஷுக்கு தெரியாததால் சாதாரணமாக வீட்டிற்கு சென்று விடுகிறான். மேலும் இசக்கிக்கு போன் செய்து, வெங்கடேஷை வெளியே விடாதீங்க என்று பரணி அலர்ட் பண்ண, வெங்கடேஷ் வெளியில் ஏதாவது சென்றாலும் அதை சண்முகத்தின் தங்கைகள் தடுப்பதில் கவனமாக இருக்கின்றனர்.
55
கொலைவெறியில் சண்முகம்
இந்நிலையில் இவர்களின் நடத்தை வெங்கடேஷுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கிவிட்டோம் என்பதை உணர்ந்த வெங்கடேஷ் எப்படியும் வீட்டை விட்டு தப்பிவிட வேண்டும் என நினைக்கிறான். இன்னொருபுறம், வெங்கடேஷ் மீது கொலை வெறியில் இருக்கும் சண்முகம் மற்றும் முத்து பாண்டி வேகவேகமாக வீட்டுக்கு வரும் நிலையில், என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.