விரட்டி விட்ட வெள்ளித்திரை; வேறு வழியின்றி சின்னத்திரை சீரியலில் காலத்தை ஓட்டிய டாப் 10 நடிகைகள்!

Published : Feb 27, 2025, 04:01 PM IST

திரைப்படங்களில் 80-ஸ் மற்றும் 90-ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக நடித்த சில நடிகைகள், திரைப்படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போக, சீரியல் நடிகைகளாக மாறியுள்ளனர் அப்படி மாறிய 10 நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.  

PREV
110
விரட்டி விட்ட வெள்ளித்திரை; வேறு வழியின்றி சின்னத்திரை சீரியலில் காலத்தை ஓட்டிய டாப் 10 நடிகைகள்!
ராதிகா:

80-களில் ரஜினிகாந்த, விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், ஒரு கட்டத்தில் சீரியல் நாயகியாக மாறினார். அந்த வகையில் இவர் கதாநாயகியாக நடித்த, அண்ணாமலை, சித்தி, வாணி ராணி, அரசி, சந்திரகுமாரி போன்ற தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

210
ரம்யா கிருஷ்ணா:

இவரை தொடர்ந்து, வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் ஹீரோயினாக மாறியவர் ரம்யா கிருஷ்ணா. திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்னர், இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்கள் கூட எதுவும் வெள்ளித்திரையில்  கிடைக்காத நிலையில், சீரியல் நாயகியாக மாறி சின்னத்திரை ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். இவர் ஹீரோயினாக நடித்த, தங்கம், வம்சம், கலசம், ராஜகுமாரி போன்ற சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது சினிமாவில் முழு கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது சில சீரியல்களில் கேமியோ ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஜெயிலர்' ஆடியோ லாஞ்சில் ரஜினி பேசிக்கொண்டிருக்கும் போது.. மைக்கை பிடுங்கி அரங்கையே அதிர விட்ட ரம்யா கிருஷ்ணா!

310
மீனா:

நடிகை மீனா 30 வயதை கடந்த பின்னர்,  தமிழ் படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போக... வேறு வழி இல்லாமல் சன் டிவி சீரியல் பக்கம் சாய்ந்தார். அந்த வகையில் இவர் 'லட்சுமி' என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இதை தொடர்ந்து, திருமணம் செய்து கொண்டு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருந்து ஒதுங்கிய நிலையில், சில வருடங்களுக்கு பின்னரே முக்கியத்துவம் கொண்ட குணச்சித்திர வேடங்களை சினிமாவில் தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

410
தேவயானி:

திருமணம் ஆன பின்னர் பட வாய்ப்பை இழந்த நடிகைகளில் ஒருவர் தான் தேவயானி.  இவர் சன் டிவியில் ஹீரோயினாக நடித்த 'கோலங்கள்' சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடியது. தற்போது வரை இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. இதை தொடர்ந்து முத்தாரம், ராசாத்தி, போன்ற தொடர்களில் நடித்தார். ஜீ தமிழில் கடந்த ஓரிரு வருடத்திற்கு முன், புதுப்புது அர்த்தங்கள் என்கிற தொடரிலும் நடித்தார். அதே போல் மாரி சீரியலிலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இயக்குநரான தேவயானிக்கு கிடைத்த மகுடம்: விருது வென்ற சாதனை படைத்த கைக்குட்டை ராணி!

 

510
சோனியா அகர்வால்:

காதல் கொண்டேன், கோவில், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து 90-ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்த சோனியா அகர்வால், திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பின்னர், சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாணல்' என்கிற சீரியலில் நடித்தார். பின்னர் இந்த தொடரில் இருந்தும் பாதிலேயே விலகினார். 

:

610
பானுப்ரியா:

80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் பானுப்ரியா. இவரின் கண்களை ரசிப்பதற்கே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இவர், திருமணம் ஆகி, கணவரை பிரிந்து... இந்தியா வந்த பின்னர், தன்னுடைய மகளை வளர்ப்பதற்காக சீரியலில் நடிக்க துவங்கினார். அந்த வகையில், இவர் நடித்த பெண், சக்தி, மனசே மந்திரம், தெய்வம், பொறந்த வீடா புகுந்த வீடா போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

கத்துக்கிட்ட எல்லாமே போச்சு! ஞாபக மறதியால் அவதிப்படும் நடிகை பானுப்ரியா!

710
சீதா:

பானுப்ரியாவை போல, நடிகை சீதாவும் பார்த்திபனை விவாகரத்து செய்த பின்னர் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்காமல் போனதும், சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். அந்த வகையில், இவர் நடித்த வேலன், சமரசம், பெண், இதயம் போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

810
சுவலட்சுமி:

நடிகை சுவலட்சுமி, வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைந்த பின்னர்... ஆன்மீக தொடராக எடுக்கப்பட்ட 'சூலம்' சீரியலில் நடித்தார். இந்த தொடர் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது. இந்த தொடர் முடிவடைந்த கையேடு, வீட்டில் பார்த்த டாக்டர் மாப்பிளையை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.  

ஆசை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க தேடி பிடிக்கப்பட்ட புதுமுகம் தான் சுவலட்சுமி!

 

910
அம்பிகா:

நடிகை அம்பிகாவும், திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பின்னர், வெள்ளித்திரைப் வாய்ப்பு கிடைக்காமல் போக இப்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் நடித்த நாயகி, அருவி தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, மல்லி தொடரில் ஹீரோவின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

1010
குஷ்பூ:

தமிழ் சினிமா ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்ட நடிகை என்கிற பெருமைக்கு உரியவர் தான் குஷ்பு. வெள்ளித்திரையில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காத போது, சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக மாறினார். அப்படி அவர் நடித்த கல்கி, பார்த்த நியாபகம், லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்திருக்காங்க... அதுவும் இத்தனை தமிழ் நடிகைகளுக்கா!!

 

Read more Photos on
click me!

Recommended Stories