Bigg Boss Soundariya vs Muthukumaran : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட செளந்தர்யாவும், முத்துக்குமரனும் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சண்டையிட்டு வருவதால் சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு பரிசுத்தொகையும் பிக் பாஸ் டிராபியும் வழங்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது இடம் செளந்தர்யாவுக்கும், மூன்றாவது இடம் விஷாலுக்கும் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பது உண்டு.
24
Muthukumaran
அந்த வகையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் அண்மையில், ஜேம்ஸ் வஸந்தன் நடத்திய நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது செளந்தர்யா பற்றிய உங்கள் நிலைப்பாடு வீட்டில் இருந்தபோது ஒன்றாகவும் வெளியே வந்த பின்னர் ஒன்றாகவும் இருக்கிறதே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முத்துக்குமரன், என்னுடைய கருத்துப்படி செளந்தர்யா பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாத ஆள் தான். ஆனால் என்னுடைய கருத்து வெகுஜன மக்களின் கருத்தோடு வேறுபட்டு இருந்தது.
ரன்னர் ஆகும் ஆளவுக்கு செளந்தர்யாவுக்கு வாக்குகள் கிடைச்சிருக்கு. அதனால் அவருக்கு பிடித்தவர்கள் ஏராளம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர் அந்த விளையாட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. அதனால் தான் ஒவ்வொரு முறையும் செளந்தர்யாவை நாமினேட் செய்தேன். என்னுடைய கருத்து இது. ஆனால் அவருடைய க்யூட்னஸ் மக்களுக்கு பிடித்துள்ளதை நான் தவறு என்றும் சொல்ல முடியாது என முத்துக்குமரன் பேசி இருந்தார்.
44
Soundariya X Post
முத்துக்குமரனின் இந்த நேர்காணல் வைரல் ஆன நிலையில், அதற்கு செளந்தர்யா தன்னுடைய எக்ஸ் தளம் வாயிலாக தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து, நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் “இன்னும்” சிலர் என்னை நாமினேட் செய்து கொண்டே இருக்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார். முத்துக்குமரனை தான் சூசகமாக தாக்கி பதிவிட்டு இருக்கிறார் செளந்தர்யா. அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.