அரசியல்வாதி, நடிகை, தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் குஷ்பு. 80களில் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குஷ்பு, தமிழில் 1988-ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், மைக்கேல் மதன காமராஜன், நடிகன், சின்னத்தம்பி, என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து குஷ்புக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. தனது அழகாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக மாறினார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் குஷ்பு. குறிப்பாக தமிழில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குஷ்புவை கொண்டாடிய அளவுக்கு தமிழ் ரசிகர்கள் வேறு எந்த நடிகையையும் கொண்டாட வில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆம். குஷ்புவுக்கு கோயில் கட்டப்பட்டது. இப்படி தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த குஷ்பு ஒரு சர்ச்சையிலும் சிக்கினார். ஆம். பிரபு – குஷ்பு காதல் விவகாரம் தான் அது. பிரபு – குஷ்பு ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், சின்னத்தம்பி படப்பிடிப்பின் போது இருவரும் காதலிக்க தொடங்கியதாக தகவல் வெளியானது. எனினும் இந்த காதல் விவகாரம் சிவாஜியின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது என்றும் அப்போது கூறப்பட்டது.
அப்போது பிரபு – குஷ்பு காதல் விவகாரம் தலைப்பு செய்தியாக வரும் அளவுக்கு இருந்தது. அப்போது ஒரு பத்திரிகை காதல் என்று கூட போடாமல், குஷ்புவும் பிரபுவும் திருமணம் செய்துவிட்டதாக செய்தி வெளியிட்டது. அதன்பின்னர் பெரிய ரகளை வெடித்தது. குஷ்பு பிரபு ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அன்றைய பத்திரிகைகளில் பிரபலமாக இருந்தது.
ஆனால் அந்த நேரத்தில் பிரபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருந்தது. குஷ்பு – பிரபு இணைந்து நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது. குஷ்புவுக்கு மிகப்பெரிய டிமான் இருந்தது. அந்த நேரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த திருமணத்திற்கு பிரபுவின் முதல் மனைவியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் உண்டு.
அதற்கு மேல் இந்த விஷயத்திற்குள் போக முடியாது. அது அவர்களின் சொந்த விஷயம். இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் காதல் முறிந்தது என்றால் அதுபற்றி பேசலாம். ஆனால் குடும்பத்திற்குள் நடந்த விஷயங்களை நாம் பேசக்கூடாது. குஷ்பு – பிரபு திருமணம் செய்துவிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிகை கூட, அவர்களாக கொடுத்து தான் அந்த செய்தியை போட்டதாக விளக்கம் கொடுத்தனர்.” என்று தெரிவித்தார்.