அஜித்தின் வாலி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்ரன் இல்லையாம்.. இந்த நடிகை தானாம்..

Published : Nov 15, 2023, 03:59 PM ISTUpdated : Nov 16, 2023, 07:33 AM IST

வாலி படத்தில் ஹீரொயினாக நடிக்க, முதல் சாய்ஸ் சிம்ரன் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?  

PREV
16
அஜித்தின் வாலி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்ரன் இல்லையாம்.. இந்த நடிகை தானாம்..

அஜித் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான ரொமாண்டிக் திரில்லர் படம் வாலி. அஜித் முதன் முறையாக டபுள் ரோலில் நடித்திருந்த இந்த படத்தின் மூலம் எஸ்.ஜே. சூர்யா இயக்குனராக அறிமுகமானார். அஜித் – சிம்ரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் 2-வது முறையாக அஜித் – சிம்ரன் ஜோடி சேர்ந்தனர்.

26

வாலி படத்திலும் அஜித் – சிம்ரன் ஜோடியின் ரொமான்ஸ் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. ஆனால் வாலி படத்தில் ஹீரொயினாக நடிக்க முதல் சாய்ஸ் சிம்ரன் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

36

ஆம் உண்மை தான்.. வாலி படத்தில் கீர்த்தி ரெட்டி தான் ஹீரோயினாக நடிப்பார் என்று தான் முதலில் அறிவிக்கப்பட்டது. தேவதை, நினைவிருக்கும் வரை உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார்.

 

46

ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதை தொடர்ந்து அஜித்திற்கு ஜோடியாக நடிக்க ரோஜா, மீனா ஆகியோரிடம் எஸ்.சூர்யா பேச்சுவாரத்தை நடத்தினார். அப்போது உச்சத்தில் இருந்த இரு நடிகைகளும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக வாலி படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர்.

56

அதன்பிறகே இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா சிம்ரனை அணுகி கதை கூற, கதை பிடித்து போகவே சிம்ரன் ஓ.கே சொல்லிவிட்டார்.ஆனால் வாலி படத்தில் வேறு யார் நடித்திருந்தாலும் சிம்ரன் அளவுக்கு நடித்திருக்க முடியுமா என்றால் சந்தேகமே. அந்தளவுக்கு அந்த படத்தில் சிம்ரனின் நடிப்பு பாராட்டப்பட்டது. 

66

இதை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன், வில்லன் போன்ற படங்களில் மீனா அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால் ரோஜாவுக்கு வாலிக்கு மீண்டும் அஜித்துடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. வாலி படத்திற்கு முன்பு வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் மட்டுமே அஜித் ரோஜா சேர்ந்து நடித்த ஒரே படமாக மாறியது.

Read more Photos on
click me!

Recommended Stories