Rich South India Actress : இவங்க தான் டாப் 3 ரிச் நடிகைகலாம்! - அவங்க Net Worth கேட்டா தலையே சுத்தும் நமக்கு!
Top 3 Richest South Indian Actresses : ஆண்களின் ஆதிக்கம் மட்டுமே திரைத்துறையில் அதிகமாக உள்ளது என்கின்ற பேச்சை எல்லாம் மூட்டை கட்டி தூக்கி போடும் அளவிற்கு பல நாயகிகள் இப்பொழுது முழு படத்தையும் தங்கள் தோளில் சுமந்து செல்கின்றனர்.
South Indian Actress
அதுமட்டுமல்லாமல் தற்பொழுது பல டாப் ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்களும் அதிக சம்பளங்களை வாங்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கி, அதன் மூலம் டாப் 3 பணக்கார நாயகிகளாக வளம்வரும் நடிகைகளை பற்றி காணலாம்.
Anushka
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றார் பிரபல நடிகை அனுஷ்கா செட்டி, தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் அனுஷ்கா செட்டிக்கு இப்பொழுது 42 வயது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாத அனுஷ்கா செட்டியின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
Tamannaah Bhatia
33 வயது தான் ஆகிறது என்றாலும் தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இன்றளவும் முன்னணி நாயகியாக நடித்து வருவதுதான் தமன்னா. விரைவில் பிரபல நடிகர் விஜய் வருண் அவர்களை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் தமன்னாவின் சொத்து மதிப்பு சுமார் 110 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
Nayanthara
நிச்சயம் முதலிடத்தில் இருக்கும் அந்த நாயகி பற்றி நீங்கள் ஏற்கனவே கணித்திருப்பீர்கள். ஆம் 38 வயதான நடிகை நயன்தாரா தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகையாக திகழ்ந்து வருகிறார். அண்மையில் அவர் தனது புதிய பிராண்ட் ஒன்றை துவங்கிய நிலையில், ஒரு படத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் சம்பளம் அவர் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. அவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 165 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.