Nayanthara Controversy
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக மேலாக ஹீரோயினாக நடித்து வரும் நயன்தாரா திரைதுறையில் வெற்றிகரமான நடிகையாக கருதப்படுகிறார். அவரின் திரை வாழ்க்கை, வெற்றிகரமானதாக இருந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல சிக்கல்களும் சர்ச்சைகளும் நிறைந்ததாகவே உள்ளது. நயன்தாராவின் காதல் உறவு, பிரபல நடிகரின் விவாகரத்துக்கே வழிவகுத்தது.
ஆம்.. நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு வில்லு படத்தில் பணிபுரியும் போது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று வதந்திகள் வந்தன, இருப்பினும் இருவரும் வதந்திகளை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல நயன்தாரா பொது நிகழ்ச்சிக்கு ஒன்றாக செல்வது, பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்தியது என வெளிப்படையாக பல செயல்களை செய்தார்.
Prabhu Deva
பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமான போதிலும், நயன்தாரா மீதான தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். எனினும் பிரபுதேவா வேறொரு நடிகையுடன் உறவில் இருப்பதாகவும், தனது குடும்பத்தை புறக்கணித்ததாகவும் கூறி அவரின் மனைவி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் சர்ச்சை வெடித்தது. பல சர்ச்சைகளுக்குப் பிறகு, பிரபுதேவாவும் லதாவும் விவாகரத்து செய்து கொண்டனர்.
Prabhu Deva and Nayanthara
ஆனால் அந்த காலக்கட்டத்தில் பிரபுதேவாவை கண்மூடித்தனமாக காதலித்த போது, அவருக்கு பண உதவி செய்ததாக ஒரு தகவல் வேகமாக பரவியது..பிரபுதேவா நயன்தாராவின் பணத்தில் மட்டுமே குறியாக இருந்தாதாகவும், தனது முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க கூட அவரின் பணத்தை செலவிட்டார் என்று தகவல்கள் வெளியானது.
nayantara and prabhu deva
பிரபுதேவாவின் இந்த செயல் நயன்தாராவை அதிகமாக காயப்படுத்தியது என்றும் அப்போது கூறப்பட்டது. மேலும் அவர் தன்னை விட தனது குழந்தைகளுடன் நெருக்கமாக இருந்தது நயன்தாராவை மேலும் கவலையில் ஆழ்த்தியதாக தகவல் வெளியானது. பிரபுதேவா தன்னைப் பயன்படுத்துவதாக உணர்ந்ததும் அந்த உறவில் இருந்து நயன்தாரா விலகியதாக வதந்திகள் பரவின.
இதற்கிடையில், நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். இறுதியில், பிரபுதேவாவும் நயன்தாராவும் 2011இல் பிரிந்தனர். நயன்தாரா திருமணம் செய்து கொள்ள கேட்ட போது, பிரபுதேவா அதை தள்ளிப்போட்டதாகவும் அவர்கள் பிரிந்ததற்கு இதவும் முக்கிய காரணம் என்றும் அப்போது கூறப்பட்டது.
இதனிடையே நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 2015 ஆம் ஆண்டு இயக்கிய நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர். இருவரும் அப்போது முதலே காதலித்து வந்த நிலையில் அப்போதே பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 2022 இல், வாடகைத் தாய் மூலம் பெற்றோரானதாக இருவரும் அறிவித்தனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டை மகன்கள் உள்ளனர். சமீபத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் தங்கள் மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.