இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி அரண்மனை 4 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
1995 ஆம் ஆண்டு நடிகை குஷ்பு மற்றும் ஜெயராம் நடித்த 'முறைமாமன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. இந்த படத்தில் குஷ்பூ உடன் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாகவும் மாறி இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இந்த படத்தை தொடர்ந்து, கமர்ஷியல் படங்களான, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னை தேடி, போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சுந்தர்.சி சமீப காலமாக திகில் படங்களை இயக்கி வருகிறார்.
சமந்தா செய்வதை பார்த்து பயந்துவிட்டேன்... உடனே நிறுத்த வேண்டும்! நடிகர் மனோஜ் பாஜ்பாய் அட்வைஸ்!
அந்த வகையில் இவர் இயக்கத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை, திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து... இப்படத்தின் அடுத்தடுத்த சீரிஸ் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சுந்தர் சி கடந்த 2021 ஆம் ஆண்டு அரண்மனை 3 படத்தை இயக்கியிருந்தார். இதில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, ராஷி கண்ணா ஹீரோயினாகவும், முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'காபி வித் காதல்' படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே மீண்டும் திகில் படத்தை கையில் எடுக்க உள்ள சுந்தர் சி, அரண்மனை 4 படத்தை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானத்தை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாக்கின. இதனை உறுதி செய்யும் விதமாக சுந்தர் சி மற்றும் சந்தானம் இருவரும் விஜய் சேதுபதியுடன் ஒன்றாக சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய் சேதுபதி அதிரடியாக விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது! 'வாத்தி' பட இயக்குனரின் சர்ச்சை கருத்துக்கு குவியும் ஆதரவும்.. எதிர்ப்பும்
விஜய் சேதுபதி தற்போது 'ஜவான்' படத்தில் நடித்து வரும் நிலையில், அரண்மனை 4 படத்தை சுந்தர் சி ஏப்ரல் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த நாட்களில் இன்னும் சில படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால், நாள் ஒதுக்க முடியாத காரணத்திற்காக இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில், சந்தானத்துடன் நடிக்க உள்ள மற்றொரு ஹீரோ யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.