சிம்புவை தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? உறுதியான தகவல்..!

First Published | Sep 15, 2022, 2:14 PM IST

சிம்பு - கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், கெளதம் மேனனின் அடுத்த பட நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர் ராம் பொத்தினேனியுடன் தான் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் தன்னுடைய அடுத்த புதிய படத்திற்காக இணைய விருக்கிறார். தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ராம் பொத்தினேனியுடன் புதிய படம் ஒன்றிற்காக அடுத்த வருடம் இணைய இருப்பதை உறுதி செய்தார்.

வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக்களமாக இது இருக்கும் என்பதையும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தனக்கும் ராம் பொத்தினேனிக்கும் ஒரு பொது நண்பராக நீண்ட காலமாக இருந்து வருவதையும் கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: ரஜினியுடன் தேசிய விருது பெற்ற சிறுவன்-முதல்வரை சந்திக்க பல மணி நேரம் காத்திருந்து சந்திக்க முடியாமல் ஏமாற்றம்!
 

Tap to resize

தீவிரமான கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட ‘வெந்து தணிந்தது காடு’ (தெலுங்கில் ‘தி லைஃப் ஆஃப் முத்து) தெலுங்கில் ஸ்ரவந்தி மூவிஸ்ஸின் ஸ்ரவந்தி ரவி கிஷோரால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே பொதுவாக ஸ்டைலிஷ், மாடர்ன் த்ரில்லர் கதைகளே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தீவிரமான ஆக்‌ஷன் கதைக்களத்தை சிம்புவுடன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கொடுத்து இருக்கிறார். 

மேலும் செய்திகள்: 'ஜெயிலர்' படப்பிடிப்பின் போது 'ஜவான்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த ரஜினி! ஷாருக்கானுடன் நடந்த சந்திப்பு
 

அதே போல் சமீப காலமாக, ராம் பொத்தினேனியும் வழக்கமான மாஸ் ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து விலகி வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். எனவே கெளதம் மேனன் – ராம் பொத்தினேனி கூட்டணியில் கதைக்களம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகவே உள்ளது.

ராமின் அடுத்த படமான #BoyapatiRapo –ன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. அது குறித்தான விவரம் விரைவில் வெளியாகும் என்றும், இதை தொடர்ந்து... கெளதம் மேனன் - ராம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: கொஞ்சம் சொதப்பிடுச்சு..? 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்து ரசிகர்களின் கருத்து..!
 

Latest Videos

click me!