பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜயின் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னணி ரோல்களில் நடிக்க இவர்களுடன் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, கிரீஸ் கணேஷ், சண்முகநாதன் என தமிழ் பிரபலங்கள் பலரும் இணைந்துள்ளனர்.
24
varisu
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வாரிசு படத்தின் டைட்டில் பார்வைகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அதோடு படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் கசிந்து குதூகலப்படுத்தி வருகிறது. ஹைதராபாத், சென்னை தற்போது விசாகப்பட்டினம் என பரபரப்பாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு தளத்திலிருந்து சமீபத்தில் ராஷ்மிகா விஜயின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சரத்குமார், பிரபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை குஷ்பூ தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ சரத்குமாரின் நாட்டாமை மற்றும் பிரபுவின் சின்னத்தம்பி படம் மூலம் மிகவும் ஃபேமஸானவர்.
இந்த இரண்டு நாயகர்களுடனும் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வரும் குஷ்பூ இவர்கள் இருக்கையில் இருள் அண்டாது என்பது போன்று குறிப்பிட்டு இந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தற்போது குஷ்புவின் பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.