திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னர்; ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோயின் யார் தெரியுமா?

Published : Dec 28, 2024, 04:58 PM ISTUpdated : Dec 28, 2024, 05:05 PM IST

முன்னணி ஹீரோக்களையே மிஞ்சும் விதத்தில், சமீப காலமாக ஹீரோயின்களும் சம்பள விஷயத்தில் டிமாண்ட் செய்ய துவங்கி விட்டனர். அந்த வகையில் ஒரு நாளைக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகையை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
16
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னர்; ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோயின் யார் தெரியுமா?
Female Actress Demand Salary

திரை துறையை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுவது வழக்கம். ஹீரோக்கள் ரூ:50 கோடி சம்பளம் பெற்றால் ஹீரோயின்களுக்கு லட்சங்களில் தான் சம்பளம் பேசப்படும். ஆனால் கடந்த சில வருடங்களாக ஒரே ஒரு ஹிட் படத்தில் நடித்து விட்டாலே, சில ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் கேட்க துவங்கி விடுகிறார்கள்.

26
Heroines increased Salary

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் இல்லை என்றாலும், 10  கோடி முதல் 15 கோடி வரை சில நடிகைகள் சம்பளம் கேட்கின்றனர். அந்த நடிகைகளுக்கு இருக்கும் டிமாண்ட் காரணமாக தயாரிப்பாளர்களும் மறு பேச்சு பேசாமல் அவர்கள் கேட்கும் சம்பளத்தை வாரி கொடுத்து விடுகிறார்கள். அதோடு மட்டும் இன்றி, சில நடிகைகள் தயாரிப்பாளருக்கு சில நிபந்தனைகள் போட்டு, அதற்கான அக்ரீமெண்ட்டில் கையெழுத்து வாங்கிய பின்னர் தான் திரைப்படங்களில் நடிக்கவே ஒப்புக்கொள்கிறார்கள்.

போதையில் பேசிய கிட்டாரிஸ்ட்; ஏ.ஆர்.ரகுமானுக்கு வந்த புத்தி! இசைப்புயல் பகிர்ந்த தகவல்!
 

36
Nayanthara Agreement

அந்த வகையில் நடிகை நயன்தாரா, எந்த ஒரு புரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன் என சொல்வதோடு, ஷூட்டிங் வெளியூரில் நடக்கும் போது குழந்தைகளை தூக்கி  வருவேன். அந்த நானிக்கும் சேர்த்து தயாரிப்பாளர் தான் காசு கொடுக்க வேண்டும் என நிர்பந்திப்பதாக சமீபத்தில், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறிய தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

46
Alia Bhatt Weds Ranbir Kapoor

அதே போல் 90-களில் 30 வயதை எட்டினாலே பட வாய்ப்புகள் நடிகைகளுக்கு மறுக்கப்படும், ஆனால் இந்த காலத்தில் 40 வயதை எட்டிய நடிகைகள் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருவது ஒருபுறம் இருக்க, திருமணம் ஆகி குழந்தை பெற்ற நடிகைகளும், திருமணமாகி விவாகரத்தான நடிகைகளுக்கும் கூட லைம் லைட்டில் உள்ளனர். அந்த வகையில் திருமணம் ஆகி குழந்தை பெற்ற நடிகை ஒருவர், ஒரு நாளைக்கு ரூ.1 கோடி வீதம் சம்பளம் வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பாராத ட்விஸ்ட்; சற்று முன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவரா?
 

56
Alia Bhatt Demand Per Day 1 Cr

10 நாள் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள, பிரபல நடிகை ஆலியா பட் தான் 9 முதல் 10 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் படி ஒரு நாளைக்கு இவர் ரூ.1 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற ஒரு நடிகைக்கு இப்படிப்பட்ட டிமாண்ட் இருப்பது.. பாலிவுட் திரையுலகின் இளம் நடிகைகளையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆலியா பட்டின் கியூட் ரியாக்ஷன்களுக்கே பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஜான்வி கபூர் போன்ற ஹீரோயின்கள், கஷ்டப்பட்டு ரசிகர்களை கவர்ந்தாலும், ஆலியா பட் அப்படி எந்த கஷ்டமும் இல்லாமல், ரசிகர்களை கவர்ந்து விட்டார். கங்குபாய் படத்திற்கு பின்னர் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 

66
RRR Promotion Song

அதே போல், 2022-ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ மௌலி இயக்கத்தில் டோலிவுட்டில் வெளியான பான் இந்தியா திரைப்படமான 'RRR' படத்தின் மூலம், இவருக்கு தென்னிந்திய திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக சீதா என்கிற கதாபாத்திரத்தில் தான் ஆலியா பட் நடித்திருந்தார். படத்தில் இவர் தோன்றும் நேரம் மிகவும் குறைவு என்றாலும், படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்தார் ஆலியா. இந்த குறைந்த நேர கதாபாத்திரத்திற்கு 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்தாராம். மேலும் 4 நாட்கள் ஆர்ஆர்ஆர் படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்காக கொடுத்தாராம். 10 நாட்களுக்கு 9 முதல் 10 கோடி கோடி ரூபாய் வாங்கியதாக தகவல்.

2024- வில்லன் நடிப்பில் மிரட்டிய 5 நடிகர்கள்! யார் யார் தெரியுமா?
 

Read more Photos on
click me!

Recommended Stories