2024- வில்லன் நடிப்பில் மிரட்டிய 5 நடிகர்கள்! யார் யார் தெரியுமா?

First Published | Dec 28, 2024, 12:32 PM IST

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில், முரட்டு வில்லனாக நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்த ஐந்து நடிகர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
 

Kamalhaasan in Kalki 2898 AD

கமல்ஹாசன்:

இதுவரை பல கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த கமல்ஹாசன், இப்போது வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான திரைப்படம் கல்கி 2898 AD. இந்த படத்தில், உலக நாயகன் கமலஹாசன் 10 நிமிடம் மட்டுமே நடித்திருந்தாலும், இதற்காக ரூ.20 கோடி வரை சம்பளமாக பெற்றார் என கூறப்பட்டது. 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், உலக அளவில் ரூ.1200 கோடி வரை வசூல் செய்தது. மகாபாரதத்தில் வரும் குருசேத்திர யுத்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், கலியுகத்தை கற்பனையாக கொண்டு சைன்ஸ் ஃபிக்சன் படமாக இயக்கி இருந்தார் நாக் அஸ்வின்.

பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட ஈரலானா பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் யாஸ்கின் என்கிற கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமலஹாசன் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம், 2026-ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில்... இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வில்லன் கதாபாத்திரம் அதிகம் ரசிக்கப்பட்டது.

Thalapathy Vijay in GOAT Movie

தளபதி விஜய்:

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் தி கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரூ. 450 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்திற்காக தளபதி விஜய்க்கு மட்டும் சுமார் 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த படத்தில் தளபதி விஜய், ஜீவன் - காந்தி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், யங் விஜய்யான ஜீவனின் வில்லன் நடிப்பு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. இதற்கு முன்பு விஜய் சில எதிர்மறை தோற்றத்தில் நடித்திருந்தாலும், இந்த அளவுக்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியதில்லை என்பதே பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மேலும் இந்த படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், அமீர், யோகி பாபு, பிரேம் ஜி அமரன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யுகேந்திரன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே தி கோட் படத்தில் நடித்திருந்தனர்.

அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவன்; கேப்டன் விஜயகாந்த் பற்றிய அரிய தகவல்கள்!

Tap to resize

Anurag Kashyap in Maharaja

அனுராக் காஷ்யப்:

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான திரைப்படம் மகாராஜா. ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் ரூ.190 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. வழக்கமான கதைக்களம் என்றாலும் இந்த படத்தை நிதிலன் சுவாமி நாதன் நேர்த்தியாக கொண்டு சென்றதே இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராகே காஷ்யப் வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார்.

மேலும் இந்த படத்தில், மம்தா மோகந்தாஸ், நட்டி சுப்பிரமணியம், அபிராமி, திவ்யபாரதி, சிங்கம்புலி, அருள் தாஸ், முனீஷ்காந்த், மணிகண்டன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Unni Mukundan in Garudan

உன்னி முகுந்தன்:

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரிய ஹீரோவாக நடித்து 2024, மே மாதம் வெளியான திரைப்படம் கருடன். ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரூ. 44 கோடி வரை வசூலை அள்ளியது. இந்த படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, உன்னி முகுந்தன் வில்லனாக நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகரான உன்னி முகுந்தன் இப்படத்தில் கருணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த வில்லன் நடிப்பை பதிவு செய்தார். மேலும் இந்த படத்தில் ஷிவதா, ரோஷினி ஹரி பிரியன், சமுத்திரகனி, மைம் கோபி, உதயகுமார், வடிவுக்கரசி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூரிக்கு ஜோடியாக ரேவதி ஷர்மா நடித்திருந்தார்.

பப்பில் செம்ம வைப் மோடில் வனிதா விஜயகுமார்; ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோஸ்!

Chethan in Viduthalai 2

விடுதலை 2:

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'விடுதலை' முதல் பாகத்தை தொடர்ந்து, 2024 டிசம்பர் மாதம் விடுதலை 2 படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று வந்தாலும், முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு விடுதலை 2 படத்தின் இரண்டாம் பாகத்தில் மிஸ் ஆகி உள்ளது, என்பதே ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

சூரி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி வாத்தியார் என்கிற போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், சூரியன் மேல் அதிகாரி கதாபாத்திரத்தில்... காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பவர் சேத்தன். மிகவும் மோசமான காவலாளியாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். இவரின் நடிப்பு திரையில் பார்பவர்களுக்கே கோவத்தை வரவைக்கும். அந்த அளவுக்கு நேர்த்தியாக நடித்து வில்லன் நடிகராக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சேத்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!