எதிர்பாராத ட்விஸ்ட்; சற்று முன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவரா?

Published : Dec 28, 2024, 02:37 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் சீசன் 8 ' நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறி உள்ள போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

PREV
15
எதிர்பாராத ட்விஸ்ட்; சற்று முன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவரா?
Bigg Boss Tamil season 8

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த ஆண்டு பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் ஒன்று தான் அதிரடியாக தொகுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 7 சீசனாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த உலக நாயகன் கமல் ஹாசன், தன்னுடைய சொந்த பணி காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். எனவே தற்போது அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
 

25
Bigg Boss Freeze Task

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி துவங்கிய நிலையில்... இன்னும் 3 வாரத்தில் முடிவுக்கு வரவுள்ளது. இறுதி கட்டத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி நெருங்கி வருவதால், இந்த வாரம் பிக் பாஸ் ஹவுஸ் மேட்சை உற்சாகப்படுத்தும் விதமாக, ப்ரீஸ் டாஸ்க் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரை வீட்டிற்குள் அனுப்பி வைத்து, இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ். அதே போல் சௌந்தர்யாவின் கிரஷ் விஷ்ணு, அருண் பிரசாத்தின் காதலியான அர்ச்சனா ரவிச்சந்திரன், விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் பேச்சாளர் மகேஷ், பவித்ராவின் தோழி உட்பட நேற்று ஒரு சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

மன்னித்துவிடுங்கள்; வருத்தத்தோடு விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கை!

35
Contestant Enjoy the Freeze Task

இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகையை அணைத்து போட்டியாளர்களும் கொண்டாடினர். போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவர்களுக்கு மற்ற போட்டியாளர் மீது ஐயூர்ந்த முரண்பாடுகளை கூறியபோதும் அதை போட்டியாளர்கள் ஏற்று கொண்டனர். இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக சென்றபோதும், எலிமினேஷன் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்று. அதன்படி இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து சற்று முன் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

45
This Week Bigg Boss Eviction

இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து, 12 போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில், மீதம் 12 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ளனர். இந்த 12 போட்டியாளர்களில்  இருந்து இந்த வாரம் விஜய் டிவி 'செல்லம்மா' சீரியல் மூலம் பிரபலமாகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அன்ஷிதா அஞ்சி தான் வெளியேறியுள்ளர் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

2024- வில்லன் நடிப்பில் மிரட்டிய 5 நடிகர்கள்! யார் யார் தெரியுமா?

55
Bigg Boss Double Eviction?

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில்... இந்த வாரம் டபிள் எவிக்ஷனுக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை டபிள் எவிக்ஷன் என்றால் பிக்பாஸ் வீட்டை விட்டு, வெளியேறும் மற்றொரு போட்டியாளர் யாராக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்... பிக்பாஸ் ரசிகர்களே? 
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories