எதிர்நீச்சல் சீரியலால் வந்த வினை..! ஷூட்டிங் முடிந்ததும்... மருத்துவமனைக்கு ஓடிய ஜான்சி ராணி! ஏன் தெரியுமா?

First Published | Mar 8, 2023, 9:34 PM IST

'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்து வரும் விஜே காயத்ரி சீரியல் ஷூட்டிங்கை முடிந்த கையேடு மருத்துவமனைக்கு தான் முதலில் சென்றேன் என கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'  கூட்டுக் குடும்பத்தில், வாழ வரும் கதாநாயகி ஜனனி, ஆணாதிக்க குணத்தோடு இருக்கும் குணசேகரனுக்கு எதிராக எப்படி போராடுகிறாள். அந்த குடும்பத்திற்கு வாழ வந்த மற்ற மருமகள்களையும் மீட்க போராடுவதை மையமாக வைத்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த சீரியல்.

தனித்துவமான கதையம்சத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை, இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் சமீபத்தில் இணைந்தவர் தான் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வீஜே காயத்ரி. இவர் இந்த சீரியலின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெருமாள் வாத்தியாராக மிரட்டும் விஜய் சேதுபதி..! சூரியின் வேற லெவல் நடிப்பில் வெளியான 'விடுதலை' ட்ரைலர்!

Tap to resize

விஜே-வாக பிரபலமான காயத்ரி 'அயலி' வெப் சீரிஸ் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் தற்போது சன் டிவி சீரியலில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில், குணசேகரனின் தங்கையான ஆதிரையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும், கரிகாலனின் அம்மாவாக ஜான்சி ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு, அவரின் தோழி மூலம் கிடைத்துளளது. மேலும் இந்த கதாபாத்திரத்திற்கான தேர்வு நடைபெற்ற போது, காயத்ரி தன்னுடைய மாடர்ன் போட்டோஸ் சிலவற்றை அனுப்பியதாகவும் இதை பார்த்தவுடன் இயக்குனர் இவர் கண்டிப்பாக, இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாக மாட்டார் என கூறியுள்ளார். பின்னர் அயலி வெப் தொடரில் நடித்த போது எடுத்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இயக்குனருக்கு அனுப்பியுள்ளார்.

Exclusive: முதல் முறையாக இரட்டை குழந்தைகளை வெளியுலகிற்கு காட்டிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்! வைரல் போட்டோஸ்!

இதைப் பார்த்த திருச்செல்வம் மறுநாளே ஷூட்டிங்கிற்கு வர சொல்லியுள்ளார். இவர் அறிமுகமாக முதல் சீனிலேயே... மாரிமுத்து, சத்யப்ரியா, பிரியதர்ஷினி என இந்த சீரியலில் நடிப்பில் பொளந்து கட்டும் அனைத்து நடிகர்களும் இருந்துள்ளனர். இவர்கள் முன் எப்படி நடிப்பது என ஜான்சி ராணி ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டாராம். எனினும் தைரியத்தை வரவைத்து கொண்டு நடித்துள்ளார்.

மேலும் இவர் நடித்த முதல் சீனில், குணசேகரனுடன் பேசிக் கொண்டே இருக்கும்போது, தன்னுடைய இடுப்பில் இருக்கும் வெற்றிலையை குணசேகரனின் கையில் கொடுத்து, தன்னுடைய மகனுக்கு ஆதரையை நிச்சயம் செய்வது போல்  வெற்றிலை பாக்கு மாற்றுவது போல் சீன் இருக்கும். எனவே இந்த கதாபாத்திரம் குறித்து இயக்குனர் கூறிய போது, இடுப்பில் வெற்றிலை இருந்தால்... நானும் வெற்றிலை பாக்கு போட்டுகொண்டு நடித்தால் தானே நன்றாக இருக்கும். வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உள்ளவர்கள் தானே எப்போதும் தங்களுடைய இடுப்பில் வெற்றிலை - பாக்கு வைத்திருப்பார்கள் என கூறினேன்.

திருமணமான நடிகரை கமுக்கமாக காதலித்து விட்டு.. அவர் ஒரு பிளே பாய் என தெரிந்ததும் கழட்டி விட்ட நடிகை மீனா?

அதற்கு இயக்குனரும் அசால்டாக, உங்களுக்கு ஓகே என்றால் போட்டுக் கொள்ளுங்கள் என கூறினார். இதற்க்கு முன்னர் வெற்றிலை - பாக்கு போட்டு அனுபவம் இல்லாத விஜே காயத்ரி, இந்த கேரக்டருக்காக  வெற்றிலை பாக்கு போட்டவுடன் வாய் முழுவதும் வெந்து போய் உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் இருந்ததால், இந்த இரண்டு நாட்களுமே அவர் வெற்றிலை பாக்கு போட்டு கொண்டு நடித்துள்ளார். எனவே வாயில் எரிச்சல் தாங்க முடியாமல், அந்த இரண்டு நாட்களுமே ஷூட்டிங் முடிந்ததும் மருத்துவமனைக்கு ஓடியதாக, சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் முதல் நாளில் தன்னுடைய நடிப்பை பார்த்து வியந்து, மாரிமுத்து தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார்.

Latest Videos

click me!