Exclusive: முதல் முறையாக இரட்டை குழந்தைகளை வெளியுலகிற்கு காட்டிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்! வைரல் போட்டோஸ்!

First Published | Mar 8, 2023, 5:00 PM IST

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் தங்களுடைய இரட்டை குழந்தைகளுடன், மும்பையில் ஏர்போர்ட்டிற்கு வந்த போது எடுக்கப்பட்ட எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் இதோ...
 

நயன்தாரா கேரளாவை சேர்ந்த நடிகை என்றாலும், இவருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது தமிழ் திரைப்படங்கள் தான். தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கு கிடைத்த வரவேற்பை தக்க வைத்துக்கொண்ட நடிகை நயன்தார, அடுத்தடுத்து தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகள் ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் நயன்தாரா, தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் கோலிவுட் திரையுலக ரசிகர்கள் மனதை கவர்ந்து, லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் தன்வசமாக்கினார்.

இவர் திரையுலகில் அறிமுகமான புதிதில், ஒரு சில காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும்,  பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவுடன் உண்டான காதல் திருமணம் வரை சென்ற நிலையில், திடீர் என இருவரும் பிரிந்து விட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காதல் தோல்வியில் இருந்து மீள்வதற்கு சில ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நயன்தாரா,  பின்னர் இயக்குனர் அட்லீ  இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

திருமணமான நடிகரை கமுக்கமாக காதலித்து விட்டு.. அவர் ஒரு பிளே பாய் என தெரிந்ததும் கழட்டி விட்ட நடிகை மீனா?

Tap to resize

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவே அடுத்தடுத்து தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். மேலும் திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து, மிகவும் மெல்லிய தோற்றத்திற்கு மாறிய நயந்தாரா... கடந்த 2015 ஆம் ஆண்டு இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நானும் ரவுடிதான் திரைப்படம் நயன்தாரா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. தன்னுடைய காதல் வாழ்க்கைக்குள் நயந்தாரா நுழைந்த பின்னர், அவருடைய திரையுலக வாழ்க்கையும் அடுத்தடுத்து வெற்றிப் பாதைகளை நோக்கியே நகரந்து சென்றது. தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, ஒரு வழியாக கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஊதி தள்ளிய தீபிகா படுகோன்! தெலுங்கு படத்தில் நடிக்க இத்தனை கோடியா?

திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா திரையுலகை விட்டு விலக உள்ளதாக சில தகவல்கள் வெளியான நிலையில், அடுத்தடுத்து சில இயக்குனர்களிடம் படத்திற்காக கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே போல் திருமணமான நான்கே மாதத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இது குறித்து ஒரு சில சர்ச்சைகள் எழுந்த நிலையில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி, அவ்வப்போது தங்களுடைய குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில்  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுடைய இரட்டை குழந்தைகளுடன் மும்பை ஏர்போர்ட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதுவரை தங்களுடைய இரட்டை குழந்தைகளை வெளியில் எங்கும் எடுத்து செல்லாத நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி முதல் முறையாக தற்போது தங்களுடைய இரட்டை குழந்தைகளை வெளியுலகிற்கு காட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகை முழுவதும் காட்டி.. வினோதமான சிகை அலங்காரத்துடன்! ஸ்ருதி ஹாசன் நடத்திய கிளாமர் போட்டோ ஷூட்!

தற்போது இந்தியில்,  பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நயன்தாரா சில தினங்கள் மும்பையில் தன்னுடைய குடும்பத்துடன் தங்கி இருந்தார். இவருடைய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் மற்றும் கணவருடன் சென்னை திரும்புகிறார் என தெரிகிறது.

Latest Videos

click me!