நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகளான ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் 3. தனுஷ் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படம் பெரிய அளவில் வெற்றியடையாவிட்டாலும், அதில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொலவெறி பாடல் உலகளவில் பேமஸ் ஆனது.