தமிழ் திரையுலகில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. இதையடுத்து பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வைத்தார் கவுதம் மேனன். தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், அஜித்தின் மங்காத்தா, கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், வெற்றிமாறனின் வடசென்னை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார் ஆண்ட்ரியா.