தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'நெஞ்சங்கள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினிகாந்த் நடித்த, எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த், 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் பின்னர் ஹீரோயினாகவும் களமிறங்கினார்.
அழகு, அமைதி, திறமை என ஒரு சேர இருந்த நடிகை மீனாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. ரஜினி - கமல் போன்ற நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை தொடர்ந்து அவர்களுக்கே ஹீரோயினாகவும் நடிக்க துவங்கினார். குறிப்பாக ரஜினி - மீனா காம்பினேஷனில் வெளியான படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியது.
ஆனால் இவர் ஒரு திருமணமான நடிகரை காதலித்து கழட்டி விட்டதாக 90-களில் தீயாக பரவிய கிசுகிசு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. மீனா நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து, டபுல்ஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார். அப்போது பிரபு தேவா பேசுவது, பழகுவது, அவரின் மேனரிஸத்தை பார்த்து மயங்கிய மீனா, பிரபு தேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் காதலிக்க துவங்கியுள்ளார்.